கேள்வி பதில்
1)கேள்வி : கைபர் போரில் யாரிடம் இஸ்லாமிய கொடியை நபிகளார் கொடுத்தார்கள்?
பதில் :
அலீ (ரலி) (ஆதாரம் : புகாரி 3009)
2)கேள்வி : வேதனைக்கு மேல் வேதனை பெறுவோர் யார்?
பதில் :
அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்தோர், குழப்பம் செய்தோர். (அல்குர்ஆன் 16:88)
3)கேள்வி : அல்லாஹ் யாரைப் பார்த்து வியப்படைவான்?
பதில் :
சங்கிகளால் பிணைக்கப்பட்டவர்களாக சொர்க்கத்தில் நுழையும் ஒரு கூட்டத்தாரைப் பார்த்து (ஆதாரம் : புகாரி 3010)
4)கேள்வி : மறுமைநாளில் யாரை எதிரான சாட்சியாக அல்லாஹ் ஆக்குவான்?
பதில் :
ஒவ்வொரு சமுதாயத்திலும் அவர்களிலிருந்தே அவர்களுக்கு எதிரான சாட்சியை ஆக்குவான் (அல்குர்ஆன் 16:89)
5)கேள்வி : அடிமைப் பெண்ணுக்கு அழகிய முறையில் கல்வியும் ஒழுக்கும் கற்பித்து, அவளையே திருமணம் செய்து கொண்டவருக்கு கிடைக்கும் கூலி எவ்வளவு?
பதில் :
இரண்டு தடவை கூலி வழங்கப்படும் (ஆதாரம் :புகாரி 3011)
6)கேள்வி : அல்லாஹ் தடுத்தவை எவை?
பதில் :
வெட்கக்கேடானவை, தீமை, மற்றும் வரம்பு மீறுதல் (அல்குர்ஆன் 16:90)
7)கேள்வி : போர் களத்தில் யாரைக் கொல்லக்கூடாது?
பதில் :
பெண்களையும் குழந்தைகளையும் (ஆதாரம்:புகாரி 3015)
8)கேள்வி : மோசடி செய்தவற்காக சத்தியம் செய்தால் என்ன ஏற்படும்?
பதில் :
உறுதிப்பட்ட பாதம் சறுகிப்போய்விடும் (அல்குர்ஆன் 16:94)
9)கேள்வி : நெருப்பால் தண்டனை கொடுக்க தகுதியானவன் யார்?
பதில் :
அல்லாஹ் மட்டுமே (ஆதாரம் : புகாரி 3016)
10)கேள்வி : அல்லாஹ்வின் பாதையில் செல்வதை தடுத்தால் என்ன ஏற்படும்?
பதில் :
தீங்கும் கடும் தண்டனையும் கிடைக்கும். (அல்குர்ஆன் 16:94)
நபிகள் நாயகத்திற்கு குர்ஆனை வெளிப்படுத்திய தேவதையின் பெயர் என்ன❓❓
ReplyDeleteஎந்த அமலுக்கு 10 லட்சம் நன்மை எழுதப்படும் ❓
Deleteஹீனைன் போரில் எத்தனை கோட்டைகள் வெற்றி கொள்ளப்பட்டன❓ அந்த கோட்டைகளின் பெயர்கள் என்ன
ReplyDelete