கேள்வி பதில்

கேள்வி :1

நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு ஆணும் நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகளில் முதலாவது எதை கூறினார்கள்?

பதில்:1

உங்கள் மனைவியரை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களாக ஆக்கிக் கொள்வதற்கு நீங்கள் கொடுக்கும் "மஹர்" தான்

ஆதாரம் : புஹாரி - 2721

கேள்வி:2

ஒரு பெண் யாருக்கு அதிகம் கடமைப் பட்டிருக்கிறாள் ?

பதில் :2

கணவனுக்கு

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் நான் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே ஒரு பெண் மனிதர்களில் யாருக்கு அதிகம் கடமைப்பட்டிருக்கிறாள் ? எனக் கேட்டேன். அதற்கு நபியவர்கள் அவளுடைய கணவனுக்கு என்று கூறினார்கள்  .

நூல் : ஹாகிம் (7244)

கேள்வி :3

ஒரு பெண் மற்ற பெண்களுக்கு இமாமாக நின்று தொழுகை நடத்தலாமா ?

அவர்கள் ஆண்களைப் போல முன்னின்று இமாமத் செய்யனுமா அல்லது வேறு எதும் தனிச்சட்டம் உண்டா ?

பதில் :3

நபி (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி)
அவர்கள் பெண்களுக்கு இமாமாக நின்று
தொழுகை நடத்துவார்கள்; முதல் வரிசையில்
பெண்களுக்கு நடுவில் நிற்பார்கள். நபி (ஸல்)
அவர்களின் மனைவி உம்மு ஸலமா (ரலி)
அவர்களும் அவ்வாறே செய்வார்கள். நபி (ஸல்)
அவர்கள் (உம்மு ஸலமா) அவர்களுக்கு
வீட்டிலுள்ள பெண்களுக்கு இமாமாக நின்று
தொழுகை நடத்த உத்தரவிட்டு, வரகா (ரலி)
அவர்களை அங்கு சென்று அவர்களுக்காக
பாங்கு கூற நியமித்தார்கள்.
ஆதாரம் பிக்ஹ்
சுன்னாஹ் 2.58

கேள்வி:4

பெண்கள் குர்பானி பிராணிகளை அறுக்களாமா ?

பதில் :4

#ஆம்_அறுக்கலாம் !

ஒரு பெண்மணி (கூர்மையான) கல்லால் ஆட்டை அறுத்து விட்டார். இது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது அதை சாப்பிடும்படி கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர்: கஅபு இப்னு மாலிக்(ரலி)
புகாரி

கேள்வி: 5

பெண்களுக்கு, அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிதலுக்கு ஈடாக நன்மையைப் பெற்றுத் தரக் கூடிய செயல் என்ன என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

பதில் : 5

பாவச் செயல் கலவாத ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்

ஆதாரம் : புஹாரி - 1861

கேள்வி:6

சொர்க்கத்தில் இளைஞர்களுக்கு தலைவர்கள் யார் ?

பதில் :6

"ஹஸனும் ஹுஸைனும் சுவனவாசிகளான இளைஞர்களின் இரு தலைவர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள். (நூற்கள்: திர்மிதீ 3701, 3714, முஸ்னத் அஹ்மத் 10576

கேள்வி:7

நபி ஸல் எந்த விளையாட்டிற்கு தடை செய்தார்கள் ?

பதில் :7

6220. அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல்(ரலி) அறிவித்தார்.  #கல்சுண்டு_விளையாட்டிற்கு (“#கத்ஃப்“) நபி(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். மேலும் நபி(ஸல்) அவர்கள், “அது வேட்டைப் பிராணியையும் கொல்லாது; எதிரியையும் வீழ்த்தாது. மாறாக, அது கண்ணைப் பறித்து விடும்; பல்லை உடைத்துவிடும்“ என்றார்கள்.

ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 78. நற்பண்புகள்

கேள்வி:8

நபி ஸல் மீது நாம் ஒரு முறை ஸலவாத் கூறினால் அல்லாஹ் நம் மீது எத்தனை ரஹ்மத்துகளை பொழிகிறான் ?

பதில் :8

திர்மிதீ

#அல்லாஹ்_பத்து_ரஹ்மத்துகளைப்_பொழிகின்றான் . ( சுப்ஹான அல்லாஹ் )

رُوِيَ عَنِ النبَّيِّ ﷺ أَنَّهُ قَالَ: مَنْ صَلَّي عَلَيَّ صَلاَةً صَلَّي اللهُ عَلَيْهِ بِهَا عَشْرًا وَكَتَبَ لَهُ بِهَا عَشْرَ حَسَنَاتٍ.

ஒருவர் என் மீது ஒரு முறை ஸலவாத் கூறினால் அவர் மீது அல்லாஹுதஆலா பத்து ரஹ்மத்துகளைப் பொழிகிறான்; பத்து நன்மைகளை எழுதுகிறான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஓர் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

கேள்வி:9

நபி ஸல் அவர்களின் தோழர்களில் யார் அதிக வயது உடையவர்களாக இருந்தார்கள் ?

பதில் :9

நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வருகை புரிந்தார்கள். அப்போது அவர்கள் தம் தோழர்களில் அபூபக்ர் (ரலி) அவர்கள் மட்டுமே கருப்பு வெள்ளை முடியுடையவர்களாக இருந்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் தான் நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் அதிக வயதுடையவராகவும் இருந்தார்கள்.

நூல் : புகாரி 3919,3920

கேள்வி :10

"அல்லாஹ்வை விட பொறுமையாளர் வேறு யாருமில்லை" என்பதை எந்த விசயத்திற்காக அல்லாஹ் பொறுமையாக இருப்பதை உதாரணமாக நபி(ஸல்) கூறினார்கள்?

A. மறுமைநாளை மக்கள் மறுப்பது

B. அல்லாஹ்விற்கு குழந்தை இருப்பதாக கூறுவது

C. குர்ஆனை இட்டுக்கட்டப்பட்டது என நம்புவது

D. அவனது தூதர்களை மறுப்பது

பதில் : 10

B. அல்லாஹ்விற்கு குழந்தை இருப்பதாக கூறுவது

ஆதாரம் : புஹாரி - 7378

Comments

  1. கேள்வி பதில் எல்லாம் நல்லா இருக்கு எனக்கு ஒரு கேள்வி மனைவியை அதிகம் அடிப்பவர் என நபி ஸல் யாரை குறிப்பிட்டார்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கேள்வி பதில்

கேள்வி பதில்

கேள்வி பதில்