கேள்வியும் பதிலும்

💖💖💖💖💖💖💖💖💖💖💖💖#அஸ்ஸலாமு_அலைக்கும்_வரஹ்மதுல்லாஹி_வ_பரகாத்துஹூ.💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

கேள்வி: 01

தானியங்களில் _____ "வஸ்க்"குகளை விடக் குறைவானவற்றில் ஸகாத் இல்லை; கால்நடைகளில் _____ ஒட்டகங்களுக்குக் குறைவானவற்றில் ஸகாத் இல்லை. (வெள்ளியில்) _____ "ஊக்கியா"க்களுக்குக் குறைவானவற்றில் ஸகாத் இல்லை
#பதில்: 01

🌹 ஐந்து, ஐந்து, ஐந்து🌹

1780. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தானியங்களில்) ஐந்து "வஸ்க்"குகளை விடக் குறைவானவற்றில் ஸகாத் இல்லை; (கால்நடைகளில்) ஐந்து ஒட்டகங்களுக்குக் குறைவானவற்றில் ஸகாத் இல்லை. (வெள்ளியில்) ஐந்து "ஊக்கியா"க்களுக்குக் குறைவானவற்றில் ஸகாத் இல்லை.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 12. ஜகாத்
#கேள்வி: 02

அல் மஸ்ஜிதுல் ஹராம் மற்றும் அல்மஸ்ஜிதுல் அக்ஸா அவ்விரண்டுக்குமிடையே எத்தனை ஆண்டுக் காலம் இடைவெளி இருந்தது?

அ. 20

ஆ. 40

இ. 35
#பதில்: 02

   🌹ஆ. 40🌹

903. அபூதர் அல்கிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்) "அல்லாஹ்வின் தூதரே! பூமியில் முதன் முதலாக அமைக்கப்பெற்ற பள்ளிவாசல் எது?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல் மஸ்ஜிதுல் ஹராம் (மக்கா நகரிலுள்ள புனித கஅபா அமைந்திருக்கும்) பள்ளிவாசல்" என்று பதிலளித்தார்கள். நான் "பிறகு எது?" என்று கேட்டேன். அவர்கள் "(ஜெரூஸலத்திலுள்ள) அல்மஸ்ஜிதுல் அக்ஸா" என்று பதிலளித்தார்கள். நான், "அவ்விரண்டுக்குமிடையே எத்தனை ஆண்டுக் காலம் (இடைவெளி இருந்தது)?" என்று கேட்டேன். அவர்கள் "நாற்பதாண்டுகள்" (மஸ்ஜிதுல் ஹராம் அமைக்கப்பெற்று நாற்பதாண்டுகள் கழித்து மஸ்ஜிதுல் அக்ஸா அமைக்கப்பெற்றது). (பின்னர்) உங்களைத் தொழுகை (நேரம்) எங்கே வந்தடைகிறதோ அங்கு நீங்கள் தொழுதுகொள்ளுங்கள்! ஏனெனில், அதுதான் இறைவனை வழிபடும் தலம் (மஸ்ஜித்) ஆகும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், அபூகாமில் அல்ஜஹ்தரீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "பிறகு உங்களைத் தொழுகை (நேரம்) எங்கே வந்தடைந்தாலும் (அங்கு) நீங்கள் தொழுதுகொள்ளுங்கள். ஏனெனில், அதுதான் இறைவனை வழிபடும் தலம் (மஸ்ஜித்) ஆகும்" என்று இடம்பெற்றுள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 5. பள்ளிவாசல்களும் தொழுமிடங்களும்
கேள்வி: 03

‌قَالَ مَا مَنَعَكَ اَلَّا تَسْجُدَ اِذْ اَمَرْتُكَ‌  قَالَ 
“நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?” என்று அல்லாஹ் கேட்டான்; அதற்கு இப்லீஸ் என்ன பதில் கூறினான்.??
பதில்: 03

اَنَا خَيْرٌ مِّنْهُ‌  خَلَقْتَنِىْ مِنْ نَّارٍ وَّخَلَقْتَهٗ مِنْ طِيْنٍ‏
“நான் அவரை ஆதமைவிட மேலானவன் - என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்” என்று இப்லீஸ் பதில் கூறினான்.
(அல்குர்ஆன் : 7:12)
கேள்வி: 04

‘ஹூருல் ஈன்’ எனப்படும்  மங்கையர்கள் தோற்றம்  எவ்வாறு (அழகு) இருக்கும்?
பதில்: 04

நபி (ஸல்) கூறினார்கள்:
‘ஹூருல் ஈன்’ எனப்படும் அகன்ற #மான்_போன்ற_விழிகளையுடைய_மங்கையரிலிருந்து இரண்டு மனைவிமார்கள் இருப்பார்கள். அவர்களின் #கால்களின்_எலும்பு_மஜ்ஜைகள்_காலின்_எலும்புக்கும்_சதைக்கும்_அப்பாலிருந்து #வெளியே_தெரியும்.

புகாரி 3254
கேள்வி: 05

சொர்க்கத்தில் இளைஞர்களுக்கு தலைவர்கள் யார் ?
பதில்: 05

📓 "ஹஸனும் ஹுஸைனும் சுவனவாசிகளான இளைஞர்களின் இரு தலைவர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள். (நூற்கள்: திர்மிதீ 3701, 3714, முஸ்னத் அஹ்மத் 10576) 📖
கேள்வி: 06   

அல்லாஹ் நேசிப்பது

A) உண்மையாளர்களை

B) விசுவாசிகளை

C) ஷஹீதுகளை

D) முஹம்மது நபியை பின்பற்றுவோரை
பதில் : 06
D
ஆதாரம் அ.கு:-3:31
கேள்வி : 07

ஒரு மனிதன் அல்லாஹ்விடம் நன்மையை எதிர் பார்த்து தன் குடும்பத்தினருக்கு செலவு செய்தால் அது அவருக்கு ___________.
பதில்: 07

தர்மமாகும்

❄ஆதாரம் : புஹாரி - 55
கேள்வி : 08

ஒரு முஸ்லி்மை ஏசுவது ________.
அவனுடன் போரிடுவது, கொலை செய்வது ___________.
பதில் : 08

பாவம் , இறை நிராகரிப்பு

❄ஆதாரம் : புஹாரி - 48
கேள்வி : 09

உங்களில் ஒருவர் இஸ்லாத்தை அழகாக்கினால் அவர் செய்யும் ஒவ்வொரு நன்மையும் ___________________________ பதிவு செய்யப்படும்.
பதில் : 09

பத்து மடங்கிலிரந்து எழு நூறு மடங்கு வரை

❄ஆதாரம் : புஹாரி - 42
கேள்வி : 10

நல்லறங்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் எது?

*A. ஃபஜருடைய தொழுகையை முன் சுன்னத்துடன் தொழுவது

*B. லைலத்துல் கத்ருடைய இரவில் நின்று வணங்குவது

*C. நிரந்தரமாக செய்யப்படும் நல்லமல்கள்

*D. அன்டைவீட்டாருக்கு நோவினை தராமலிருப்பது
பதில் :10

*C. நிரந்தரமாக செய்யப்படும் நல்லமல்கள்

❄ஆதாரம் : புஹாரி - 43

Comments

Popular posts from this blog

கேள்வி பதில்

கேள்வி பதில்

கேள்வி பதில்