கேள்வி பதில்
#அஸ்ஸலாமு_அலைக்கும்_வரஹ்மதுல்லாஹி_வபரகாத்துஹு.
#கேள்வி 1
________ ஆசை உங்களை அல்லாஹ்வை விட்டும் பராக்காக்கி விட்டது.
#பதில் 1
اَلْهٰٮكُمُ التَّكَاثُرُۙ
செல்வத்தைப பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது-
(அல்குர்ஆன் : 102:1)
#கேள்வி 2
அந்நாளில் சிதறடிக்கப்படட _____ போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள்
அ. ஈசல்
ஆ. கொசு
இ. துகள்
#பதில் 2
يَوْمَ يَكُوْنُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوْثِۙ
அந்நாளில் சிதறடிக்கப்படட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள்.
(அல்குர்ஆன் : 101:4)
#கேள்வி 3
மலைகள் கொட்டப்பட்ட _____ போன்று ஆகிவிடும்.
#rpt
#பதில் 3
وَتَكُوْنُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوْشِ
மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும்.
(அல்குர்ஆன் : 101:5)
#கேள்வி 4
ஹாவியா என்பது என்ன ?
#பதில் 4
وَمَاۤ اَدْرٰٮكَ مَا هِيَهْ
இன்னும் (“ஹாவியா”) என்ன என்று உமக்கு அறிவித்தது எது?
(அல்குர்ஆன் : 101:10)
نَارٌ حَامِيَةٌ
அது சுட்டெரிக்கும் (நரகத்தின்) தீக்கிடங்காகும்.
(அல்குர்ஆன் : 101:11)
#கேள்வி 5
கண்ணியமிக்க இரவு ____ மாதங்களை விட மிக்க மேலானதாகும்
அ. 100
ஆ. 1000
இ. 10000
#rpt
#பதில் 5
لَيْلَةُ الْقَدْرِ ۙ خَيْرٌ مِّنْ اَلْفِ شَهْرٍ
கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும்.
(அல்குர்ஆன் : 97:3)
#கேள்வி 6
_____என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.
#பதில் 6
خَلَقَ الْاِنْسَانَ مِنْ عَلَقٍ
“அலக்” என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.
(அல்குர்ஆன் : 96:2)
#கேள்வி 7
அவனே(அல்லாஹ்) ______ கொண்டு கற்றுக் கொடுத்தான்.
#பதில் 7
الَّذِىْ عَلَّمَ بِالْقَلَمِۙ
அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.
(அல்குர்ஆன் : 96:4)
#கேள்வி 8
நபி(ஸல்) அவர்களை அல்லாஹ் செல்வத்தால் தேவையற்றவராக ஆக்கினான்.
அ. சரி
ஆ. தவறு
#பதில் 8
وَوَجَدَكَ عَآٮِٕلًا فَاَغْنٰى
மேலும், அவன் உம்மைத் தேவையுடையவராகக்கண்டு, (உம்மைச் செல்வத்தால்) தேவையில்லாதவராக்கினான்.
(அல்குர்ஆன் : 93:8)
#கேள்வி 9
_______ உதிர்ந்து விழும்போது
அ. இலைகள்
ஆ. நிலவு
இ. நட்சத்திரங்கள்
#பதில் 9
وَاِذَا الْكَوَاكِبُ انْتَثَرَتْۙ
நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது-
(அல்குர்ஆன் : 82:2)
#கேள்வி 10
நாம் ______ சந்ததியை இழிவு தரும் வேதனையிலிருந்தும் திட்டமாகக் காப்பாற்றினோம்; என அல்லாஹ் கூறுகிறான்?
#பதில் 10
وَلَقَدْ نَجَّيْنَا بَنِىْۤ اِسْرَآءِيْلَ مِنَ الْعَذَابِ الْمُهِيْنِۙ
நாம் இஸ்ராயீலின் சந்ததியை இழிவு தரும் வேதனையிலிருந்தும் திட்டமாகக் காப்பாற்றினோம்;
(அல்குர்ஆன் : 44:30)
Comments
Post a Comment