கேள்வி பதில்
வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு
1.யுகமுடிவு நாளின் அடையாளமாக எத்தனை பொய்யர்கள் இறைத்தூதர் என வாதிடுவார்கள்
அ.10
ஆ.20
இ.30
Ans: இ.30
2.எந்த நதியில் மறுமை நாளின் அடையாளமாக தங்க புதையல் வெளியேறும்
அ.யூப்ரடீஸ் நதி
ஆ.நைல் நதி
இ.இரண்டும்
Ans: அ.யூப்ரடீஸ் நதி
3. கடைசி காலத்தில் ஒரு கலிபா தோன்றுவார் அவர் -------------
அ.எண்ணிப் பார்க்காமல் செல்வம் வழங்குவார்
ஆ.மக்களின் அந்தஸ்தை உயர்ந்துவார்
இ.ஜிஸ்யா வரியை வாங்கமாட்டார்
Ans :அ.எண்ணிப் பார்க்காமல் செல்வம் வழங்குவார்
4.மறுமை நாளின் அடையாளமாக பெண்களின் எண்ணிக்கை?
அ.அதிகரிக்கும்
ஆ.அதிகரிக்காது
Ans:அ.அதிகரிக்கும்
5.எந்த கோத்திரத்தை சேர்ந்தவர் தமது கைத்தடியால் மக்களை ஓட்டிச் செல்லும் வரை யுகமுடிவு நாள் ஏற்படாது என நபி(ஸல் ) அவர்கள் கூறினார்கள்
அ.கினானா கோத்திரம்
ஆ.குரைஷி கோத்திரம்
இ.கஹ்தான் கோத்திரம்
Ans:இ.கஹ்தான் கோத்திரம்
6.புகைமூட்டம் ஏற்படும்போது முஃமீனுக்கு இப்புகை எதைப்போன்று இருக்கும்.
அ.தும்பலைப் போன்று
ஆ.ஜலதோஷத்தைப் போன்று
இ.காய்ச்சலைப் போன்று
Ans:ஆ.ஜலதோஷத்தைப் போன்று
7.மறுமை நாளின் மாபெரும் பத்து அடையாளங்களில் ஐந்து அடையாளம் கூறுக
Ans:
a.சூரியன் மேற்கு திசையில் உதிக்கும்
b.தஜ்ஜால் வருகை
c.ஈஸா (அலை)இறங்குவார்கள்
d. “தாப்பத்துல் அர்ழு” எனும் ஒரு ஆச்சர்யமான பிராணி பூமியிலிருந்து வெளிப்படும்.
e.மூன்று நில நடுக்கங்கள். ஒன்று கிழக்கிலும், மற்றொன்று மேற்கிலும்,இன்னொன்று அரபு தீபகற்பத்திலும்.
8.தஜ்ஜால் நெருங்க முடியாத நான்கு பள்ளி எவை?
Ans:
a.மஸ்ஜிதுல் ஹரம்
b.மஸ்ஜிதுன் நபவி
c.பைத்துல் முகத்தஸ்
d.மஸ்ஜித் தூர்
9.உங்களில் ஒருவர் என்றால் யஃஜூஜ் மஃஜூஜ்---------என்ற கணக்கில் நரகவாசிகளின் எண்ணிக்கையாக இருக்கும்.
அ.2000
ஆ.1000
இ.4000
Ans:ஆ.1000
10.தஜ்ஜால் பற்றிய அச்சம் மதினாவிற்கு இல்லை ஏனெனில் அன்றைய தினம் மதினாவில் 7 வாசலிற்கும் ஒவ்வொரு வாசலிலும் ------ மலக்குகள் இருப்பார்கள்
அ.4
ஆ.2
இ.1
Ans:ஆ.2
Comments
Post a Comment