கேள்வி பதில்

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹#அஸ்ஸலாமு_அலைக்கும்_வரஹ்மதுல்லாஹி_வ_பரகாத்துஹூ.⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

#இஸ்லாமிய_கேள்வியும்_பதிலும்_நிகழ்ச்சி.

கேள்வி1) எது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கிறது.?

#பதில்1 -ஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்?
நீங்கள் #செய்யாததை_நீங்கள்_கூறுவது_அல்லாஹ்விடம்_பெரிதும்_வெறுப்புடையதாக இருக்கிறது.
#Quran61:2,3

#கேள்வி2) நபிகளாரிடம் மக்களிலேயே உங்களுக்கு மிகப் பிரியமானவர்கள் யார் என கேட்டதற்கு யாரை கூறினார்கள்?

ஆண்களில் பிரியமானவர் யார் என நபி ஸல் கூறினார்கள்?

#பதில்2-
மக்களிலே பிரியமானவர் #ஆயிஷா ரலி

#ஆண்களில் பிரியமானவர் அபூ பக்ர் ரலி

அம்ர் இப்னு ஆஸ்(ரலி) கூறினார்.
நபி(ஸல்) அவர்கள் 'தாத்துஸ் ஸலாஸில்'எனும் போருக்கான படைக்கு (தளபதியாக்கி) என்னை அனுப்பி வைத்தார்கள். அப்போது

நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்று, #மக்களிலேயே உங்களுக்கு மிகப் #பிரியமானவர்கள் யார்?' என்று கேட்டேன். அவர்கள், '#ஆயிஷா' என்று பதிலளித்தார்கள். நான், '#ஆண்களில் மிகப் #பிரியமானவர்கள் யார்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், #ஆயிஷாவின்_தந்தை #அபூ பக்ர்
என்று பதிலளித்தார்கள். '

#பிறகு யார் (பிரியமானவர்) என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'பிறகு #உமர்_இப்னு_கத்தாப் தான் (எனக்கு மிகவும் பிரியமானவர்)' என்று கூறிவிட்டு, மேலும் பல ஆண்க(ளின் பெயர்க)ளைக் குறிப்பிட்டார்கள்.

#புகாரி 3662

#கேள்வி3) எனது (பிரத்தியேக) உதவியாளர் என்று நபிகளார் யாரைக் குறிப்பிட்டார்கள்?

பதில்3 : #ஸுபைர்_பின்_அவ்வாம் (ரலி) (ஆதாரம் : புகாரி 2997)

#கேள்வி4) என்னுடைய இந்தச் #சமுதாயத்தாரின்_நம்பிக்கைக்குரியவர் என நபி ஸல் யாரை கூறினார்கள்?

#பதில்4 -
#அபூ_உபைதா_இப்னு_அல்ஜர்ராஹ் ரலி

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் (அவர்களின்) நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் ஒருவர் உண்டு. (என்னுடைய) இந்தச் சமுதாயத்தாரின் நம்பிக்கைக்குரியவர் அபூ உபைதா ஆவார்.

ஸஹீஹ் புகாரி 7255

#கேள்வி5) நயவஞ்சகர்களின் தொழுகை எவ்வாறு இருக்கும் என அல்லாஹ் கூறுகிறான் ?

#பதில்5- அவர்கள் #தொழுகையில் #நிற்கும்_போது_சோம்பேறிகளாகவும், #மக்களுக்குக்_காட்டுவோராகவும் நிற்கின்றனர்.

👉இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்றுகின்றார்கள். உண்மையில் அவனே இவர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கி இருக்கின்றான்.
இவர்கள் தொழுகைக்காக எழுந்து நின்றால் சோம்பல்பட்டுக் கொண்டே நிற்கிறார்கள். மக்களுக்குக் காட்டிக் கொள்ளவே தொழுகிறார்கள். இன்னும், அல்லாஹ்வை மிகக் குறைவாகவே நினைவுகூருகிறார்கள்.
(அல்குர்ஆன் : 4:142)

👉(தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழாமல் வேண்டுமென தாமதப்படுத்துவதையும், நிதானமின்றி அவசர அவசரமாகத் தொழுது முடிப்பதும் அடங்கும் பார்க்க முஸ்லிம்1097)

#கேள்வி6) நபி ஸல் கூறினார்கள்
மறுமை நாளில் இறைநம்பிக்கையாளரின் தராசில் நற்குணத்தை தவிர வேறு ஏதும் எடை கூட்டக்கூடியதாக இருக்காது

நற்குணம் என்றால் என்ன?

#பதில்6 :-நற்குணம் என்பது முகமலர்ச்சியும், ஈகையும், பிறருக்கு தீங்கிழைக்காமல் இருப்பதுமே ஆகும் என்றார்கள்.

~திர்மிதி1928

( #நற்குணமுடையவர் தம் பண்புகளால் நோன்பாளி, தொழுகையாளி ஆகியோரின் தகுதியை எட்டி விடுகிறார்)

~திர்மிதி1926

மக்கள் அதிகமா சொர்க்கத்திற்கு நுழைய காரணமாக இருப்பது இறையச்சமும்,நற்குணமும் தான் என நபி ஸல் கூறினார்கள்.

~திர்மிதி1927

#கேள்வி7) எந்த பழக்கமுடையவர்கள் எனக்கு மிகவும் வெறுப்பானவர்களும் மறுமை நாளில் என்னிடமிருந்து வெகு தொலைவில் தள்ளியிருப்போரும் ஆவர் என நபி அவர்கள் கூறினார்கள்?

#பதில் 7:-

#தொணதொணவென்று பேசும் பழக்கமுடையவர்களும், #வாய்க்கு_வந்தபடி_உளறிக்கொட்டுவோரும், #தற்பெருமை உள்ளவர்களும் தான்  எனக்கு மிகவும் #வெறுப்பானவர்களும் மறுமை நாளில் என்னிடமிருந்து வெகு தொலைவில் தள்ளி இருப்போரும் ஆவார்கள்.
திர்மிதி 1941

#கேள்வி8)
மரத்தை உலுக்குவதால் மரத்திலிருந்து இலைகள் விழுவது போல் 

எந்த திக்ருகளை செய்வதினால் நமது பாவங்கள் விழச் செய்யும் என நபி ஸல் கூறினார்கள்?

பதில்8:-மரத்தை உலுக்குவதால் மரத்திலிருந்து இலைகள் விழுவது போல்

#சுப்ஹானல்லாஹ், #அல்ஹம்துலில்லாஹ், #லாஇலாஹ_இல்லல்லாஹ், #அல்லாஹு_அக்பர்” என்று சொல்வது சொல்பவருடைய பாவங்களை விழச்செய்து விடுகிறது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)

( عَنْ أَنَسٍ ؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: إِنَّ سُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلّهِ وَلاَإِلَهَ إِلاَّاللهُ وَاللهُ أَكْبَرُ تَنْفُضُ الْخَطَايَا كَمَا تَنْفُضُ الشَّجَرَةُ وَرَقَهَا.
رواه احمد: ٣ /١٥٢)

#கேள்வி9)

நபி ஸல் அவர்கள்  குழந்தை ஒன்றை தம் தோளில் சுமந்துக்கொண்டு தொழுதிருக்கிறார்கள், ஸஜ்தாவிற்கு செல்லும் போது இறக்கி விடுவார்கள் நிற்கும் போது தோளில் தூக்கி கொள்வார்கள்

அந்த குழந்தையின் #பெயர் என்ன? அந்த #குழந்தை நபிக்கு என்ன #உறவு_வேண்டும்?

#பதில்9-

நபி அவர்களின் #பேத்தி #உமாமா_ரலி

👉நபி(ஸல்) அவர்கள் #தங்களின்_மகள்_ஸைனப் அவர்களின் #குழந்தை_உமாமா வைத் தோளில் சுமந்த நிலையில் தொழுதிருக்கிறார்கள்.

ஸஜ்தாவுக்குச் செல்லும்போது இறக்கி விடுவார்கள். நிற்கும்போது தூக்கிக் கொள்வார்கள்.
புகாரி516

கேள்வி10) யார் இவர்?

1)இவர்களுடைய மகனுக்கு நபிகளார் இப்ராஹீம் என்று பெயர் சூட்டினார்கள்.

2) இவர்கள் என்னைச் சார்ந்தவர்கள், நான் அவர்களைச் சார்ந்தவன் என இவர்களின் குலத்தை குறிப்பிட்டு நபிகளார் கூறினார்கள்

3)இவருடைய குலத்தவர்கள் தங்களிடம்  உணவு குறைந்து விட்டால் அனைவரும் தங்களிடம் எஞ்சி இருப்பதை ஒரு துணியில் சேகரித்து தங்களுக்குள் சமமாக பங்கிட்டுக் கொள்வார்கள்.

4)தாவூத் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த இனிய குரல் இவருக்கும் வழங்கப்பட்டுள்ளது

#பதில்10 - அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள்

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

1-ஆதாரம் புகாரி:5467

2-ஆதாரம் புகாரி 2486                          

3-ஆதாரம் புகாரி:2486

4-ஆதாரம் புகாரி 5048

Comments

Popular posts from this blog

கேள்வி பதில்

கேள்வி பதில்

கேள்வி பதில்