இஸ்லாமிய கேள்வி பதில்

#அஸ்ஸலாமு_அலைக்கும்_வரஹ்மதுல்லாஹி_வபரகாத்துஹு.
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

🔆♾கேள்வி{1}♾🔆

செயல்களில் சிறந்தது எது?

👑💠பதில்{1}💠👑

செயல்களில் சிறந்தது #தொழுகையை_அதன்_நேரத்தில்_தொழுவதாகும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரழி).  நூல்கள் : புஹாரி, முஸ்லிம்.

🔆♾கேள்வி{2}♾🔆

நமக்கும் காபிர்களுக்கு மிடையே இறைவன் ஏற்படுத்திய வித்தியாசம் என்ன?

👑💠பதில்{2}💠👑

நமக்கும் அவர்களுக்குமிடையே (காபிர்களுக்கு மிடையே) இறைவன் ஏற்படுத்திய வித்தியாசம் #தொழுகையேயாகும். யார் அதனை விட்டுவிட்டாரோ அவர் #காஃபிராகி_விட்டார் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : புரைதா (ரழி). நூல்கள் : திர்மிதி, அபூதாவுத், அஹ்மது, இப்னுமாஜா, நஸயீ, இப்னு ஹிப்பான்.

🔆♾கேள்வி{3}♾🔆

பூமி முழுவதுமே அல்லாஹ்வை தொழும் இடம் மஸ்ஜித் ஆகும்.இரண்டு இடத்தை தவிர அவை  எவை?

👑💠பதில்{3}💠👑

#இறந்தவர்_அடக்கம்_செய்யப்பட்ட இடம் #கப்ரு மற்றும் #குளியலறையைத் தவிர, பூமி முழுவதுமே அல்லாஹ்வை தொழும் இடம் (மஸ்ஜித்) ஆகும். என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல் குத்ரி(ரழி). நூல் :திர்மிதீ.

🔆♾கேள்வி{4}♾🔆

எவர் முழுமையான ஈமான் கொண்டவராக மாட்டார்?

👑💠பதில்{4}💠👑

உங்களில் ஒருவர் #தமக்கு விரும்புவதையே தம் #சகோதரனுக்கும் விரும்பாதது வரை (முழுமையான) #ஈமான் கொண்டவராக #மாட்டார் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரழி) நூல் : புஹாரி (11).

🔆♾கேள்வி{5}♾🔆

ஒரு முஃமின் இன்னொரு முஃமின் விஷயத்தில் நியாயமாக நடந்து கொள்ள வெண்டும். என்று நபி ஸல் கூறினார்கள் இவர்களின் #உவமையாக எதை கூறினார்கள்?

👑💠பதில்{5}💠👑

#ஒரு_கட்டிடத்தின்_பகுதி_இன்னொரு_பகுதியை_எப்படி #வலுப்படுத்திகொண்டிருக்கிறதோ அது போலவே ஒரு முஃமின் இன்னொரு முஃமின் விஷயத்தில் நடந்து கொள்ள வெண்டும். என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் தங்கள் விரல்களை கோர்த்துக் காட்டினார்கள். அறிவிப்பவர் : அபூ மூஸா (ரழி) நூல்: புஹாரி (481).

🔆♾கேள்வி{6}♾🔆

உண்மையான இறை நம்பிக்கையாளர்கள் எந்த தன்மையுடன் இருப்பார்?

👑💠பதில்{6}💠👑

#ஒருவருக்கொருவர்_கருணை_புரிவதிலும், அன்பு #செலுத்துவதிலும், #இரக்கம்_காட்டுவதிலும், (உண்மையான) இறை நம்பிக்கையாளர்களை #ஓர்_உடலைப்_போன்று_நீ_காண்பாய். உடலின் ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்தக்கொண்டிருக்கின்றன, அத்துடன் உடல் முழுவதும் காய்ச்சல் கண்டு விடுகிறது என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : நுஃமான் பின் பஸீர் (ரழி) நூல்: புஹாரி (4011).

🔆♾கேள்வி{7}♾🔆

மக்களை அதிகமாக சுவர்க்கத்தில் புகுத்துவது எது?

👑💠பதில்{7}💠👑

மக்களை அதிகமாக சுவர்க்கத்தில் புகுத்துபவை #இறையச்சமும்_நற்குணமும்தான் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல் : திர்மிதீ, ஹாகிம்.

🔆♾கேள்வி{8}♾🔆

இறைநம்பிக்கையாளன் ______ அடிக்கடி _______ இருப்பது இல்லை. _______ செயல்புரிபவனாகவும், சண்டையில் ___________ பேசுபவனாகவும் இருப்பதில்லை

👑💠பதில்{8}💠👑

இறைநம்பிக்கையாளன் #குத்திப்_பேசுபவனாகவும் அடிக்கடி #சாபமிடுபவனாகவும் இருப்பது இல்லை. #மானங்கெட்ட செயல்புரிபவனாகவும், சண்டையில் #தீய_வார்த்தைகள் பேசுபவனாகவும் இருப்பதில்லை என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூதர்தா (ரழி). நூல் : ஹாகிம்.

🔆♾கேள்வி{9}♾🔆

எவருடைய முகத்தை மறுமையில் நெருப்பிலிருந்து காக்கிறான்?

👑💠பதில்{9}💠👑

எவர் தன்னுடைய #சகோதரனுடைய_மானத்தை #அவனறியாமலேயே_காக்கிறாரோ அல்லாஹ் அவருடைய #முகத்தை_மறுமையில் #நெருப்பிலிருந்து_காக்கிறான் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ தர்தா (ரழி). நூல் : திர்மிதி.

🔆♾கேள்வி{10}♾🔆

அல்லாஹ்விடத்தில் கெட்டவர் யார்?

அல்லாஹ்விடம் மிகவும் வெறுப்புக்குரியவன் யார்?

👑💠பதில்{10}💠👑

#பகைமை_கொள்பவர்களும், #தீயவர்களும் (தான்) அல்லாஹ்விடத்தில் கெட்டவர்கள்
நூல் : திர்மிதி

#கடுமையாகச்_சண்டையிடுபவன், #மனதில்_பகைமையை_வைத்திருப்பவன் அல்லாஹ்விடம் மிகவும் வெறுப்புக்குரியவன் ஆவான்
நூல்: முஸ்லிம்

Comments

Popular posts from this blog

கேள்வி பதில்

கேள்வி பதில்

கேள்வி பதில்