கேள்வி பதில்


கேள்வி - 1 மறுமைநாளில் மக்கள் அல்லாஹ்வின் முன்னால் எவ்வாறு இருப்பார்கள்?

A - அச்சநிலையில்

B - போதையுற்ற நிலையில்

C - பீதியடைந்த நிலையில்

விடை: 2 போதையுற்ற நிலையில்
திருக்குர்ஆன்-22:2

கேள்வி - 2 உண்மையான இறைநம்பிக்கையாளர் இனி ஒரு போதும்___________கூறுவது கூடாது என்று அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்..

A - பொய் கூறுவது..

B - பொய் சாட்சியம் கூறுவது..

C - அவதூறு கூறுவது..

விடை:-2 C அவதூறு கூறுவது..
திருக்குர்ஆன்-24:17

கேள்வி -3 அந்நாளில் நரகத்தை நோக்கி தங்களுடைய முகங்களால் இழுத்துச் செல்லப்படுபவர்கள் யார்?

A - தீமையை மட்டும் செய்தவன்..

B இறை மறுப்பாளன்..

C வட்டி வாங்கியவன்..

விடை:- 3 B இறை மறுப்பாளன்..
திருக்குர்ஆன்-25:34

கேள்வி- 4 இறைமறுப்பாளர்க்கு மறுமைநாள் _________தும், மிகவும் ____________தும் ஆக இருக்கும்..

A - கடினமானதும்,துன்பாமானதும்..

B - அதிர்ச்சியளிக்கக்கூடியதும்,கசப்பானதும்..

C - துனபம் தரக்கூடியதும்,வேதனையானதும்..

விடை: 4 B அதிர்ச்சியளிக்கக்கூடியதும்,கசப்பானதும்..
திருக்குர்ஆன்-54-46

கேள்வி - 5 முஃப்லிஹூன் என்றால் யார்.?

A - வெற்றியாளர்கள்..

B - இறைநேசர்கள்..

C - சீமான்கள்..

விடை:- 5 Aவெற்றியாளர்கள்..
திருக்குர்ஆன்-59-9

கேள்வி - 6 நிச்சயமாக இவர்கள் "பொய்யர்கள்" என்று வல்லவனும் மாண்புடையோனுமாகிய அல்லாஹ்வே சாட்சியம் அளிக்கின்றான்..?

A - காஃபிர்கள்..

B - இறை வசனங்களை மறுப்பவர்கள்..

C - நயவஞ்சகர்கள்..

விடை:-6 C நயவஞ்சகர்கள்..
திருக்குர்ஆன்-63:1

கேள்வி - 7 அந்நாளில் இடதுபக்கதார் மீது கண்ணியமிக்கோனான அல்லாஹ்வின் ___________ படர்ந்திருக்கும்..!

A - நெருப்பு..

B - வேதனை..

C - கோபம்..

விடை:- 7 A நெருப்பு..
திருக்குர்ஆன்-90:20

கேள்வி - 8 ஏக இறைவனை துதிக்கும் சொற்களில் மிகவும் சிறந்ததும், தன்னுடைய மலக்குகளுகாகவும், தன்னுடைய அடியார்களுக்காவும் அல்லாஹ் தேர்ந்தெடுத்துள்ள திக்ர் எது..?

A - லாஇலாஹ இல்லலாஹு முஹம்மதுர் ரஸூலில்லாஹ்..

B - சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலாஇலாஹ இல்லலாஹு வல்லாஹு அக்பர்..

C - சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி..

D - லாஹவ்ல வலா குவ்வத்த இல்லாபில்லாஹ்..

விடை:-8 C சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி..
முஸ்லீம்-5277

கேள்வி - 9 பணக்காரர் ஒருவர் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காமல் தவணை கேட்டு இழுத்தடிப்படது____________ஆகும்..!

விடை:- 9 அநியாமாகும்..
புகாரி-2287

கேள்வி - 10 வல்ல இறைவனான உயர்ந்தோன் அல்லாஹ் மனிதர்களின் _____________யை தன்னுடைய நாட்டத்தின்படியே மாற்றுகிறான்..!

A - செயல்களை..

B - விதிகளை..

C - உள்ளங்களை..

விடை:- உள்ளங்களை..
முஸ்லீம்-5161

Comments

Popular posts from this blog

கேள்வி பதில்

கேள்வி பதில்

கேள்வி பதில்