வழிகெட்ட72கூட்டங்கள்யார்?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதஹூ

#வழிகெட்ட72கூட்டங்கள்யார்?
1. ராபிளிய்யா
2.காரிஜிய்யா
3.ஜபரிய்யா
4.கதரிய்யா
5.ஜுஹைமியா
6.மர்ஜியா என்று ஆறு பிரிவுகள்

ராபிலிய்யா ,காரிஜிய்யா ,ஜபரிய்யா இந்த மூன்றும் ஷியா என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள் .

ராபிளிய்யாவில் 12 பிரிவினர்கள்
1. அலவிய்யா 2.பதாயிய்யா 3. ஷிய்யா 4.இஸ்ஹாக்கிய்யா 5.செய்திய்யா 6.அபபாஸிய்யா 7.இமாமிய்யா 8.நாவிஸிய்யா 9. முதனாசிகிய்யா 10. லா இனிய்யா 11.ராஜிஇய்யா 12. முத்ராபிஸிய்யா

இவர்கள் தான் வழிகெட்ட கூட்டத்தார்

இவர்களின் கொள்கை -தொழுகைக்கு இமாம் ஜமாஅத் அவசியமில்லை ,தராவீஹ் சுன்னத் இல்லை இன்னும் ஹஸ்ரத் அபூபக்கர் சித்தீக் ,உமர்,மற்றும் உஸ்மான் ரலியல்லாஹு தஆலா அன்ஹும் இம்மூவரையும் குறை கூறுவார்கள் .இதில் அலவிய்யாக்கள் ஹஸ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை நபி என்றும் பதாஇய்யாக்கள் நபித்துவத்தில் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு பங்கு உண்டு என்றும் கூறுவார்கள் .

காரிஜிய்யா என்ற கூட்டத்திலிருந்து 12 பிரிவினர்கள் .

1. அஸ்ரகிய்யா 2. இபாலிய்யா 3. சஹ்லபிய்யா 4.ஹாஸிமிய்யா 5.கலபிய்யா 6.கூஸிய்யா 7.கண்சிய்யா 8.ஷிம்ராக்கிய்யா 9. முஹ்தஜிய்யா 10.மைமூனிய்யா 11. மஹகமிய்யா 12. அக்நஸிய்யா

இவர்களின் கொள்கையும் ஜமாஅது இல்லை . கிப்லா இல்லை , ஜகாத் இல்லை , நபியவர்களின் ஷபாஅத் இல்லை .

ஜபரிய்யா என்ற கூட்டத்திலிருந்து 12 பிரிவுகள்

1.முள்தர்றியா 2.அப்ஆலிய்யா 3. ம இய்யா 4.மப்ரூகிய்யா 5.நஜ்ஜாரிய்யா 6.மைமனிய்யா 7.கஸ்லியா 8.ஸாபிகிய்யா 9.ஹபீபிய்யா 10.கவ்பிய்யா 11. ஹஸ்பிய்யா 12. பிக்ரியா

இவர்களின் கொள்கைகள் வணங்குவதால் எந்த பிரயோஜனமும் இல்லை என்று கூறுவார்கள்

கதரியா என்ற கூட்டத்திலிருந்து 12 பிரிவுகள்

1. அஹ்மதியா 2. சனவிய்யா 3. ஷைத்தானியா 4.ஷரீக்கியா 5.வஹ்மிய்யா 6.அபதிய்யா 7.நாமிதிய்யா 8. முதபாரிய்யா 9.காசிதிய்யா 10. நிலாமிய்யா 11.மும்தரிய்யா 12. கைஸானிய்யா

இவர்களின் முக்கிய கொள்கை நன்மையை படைக்க ஒரு இறைவன் ,தீமையை படைக்க ஒரு இறைவன் என்பதாகும் .அதிலும் ஷைத்தானியாக்கள் ஷைத்தான்கள் இல்லை என கூறுவார்கள் ......

எனதருமை சகோதர சகோதரிகளே சற்று சிந்தியுங்கள் நாம் எந்த கொள்கையில் இருக்கின்றோம் நமது அமல் எத்தகைய நிலையில் உள்ளது என.
  
   அல்லாஹ் நம் அனைவரையும் இந்த வழி கெட்ட 72 பிரிவுகளிலிருந்து பாதுகாத்து சுவர்க்கம் செல்லக்கூடிய அந்த 1கூட்டமாகிய நபியும் அவர்களின் ஸஹாபாக்கள் எந்த ஒன்றிலிருந்தார்களோ அந்த கூட்டத்தில் நம்மையும் நம் பெற்றோர்களையும் நம் சந்ததிகளையும், உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் அருள் புரிவானக ஆமீன் யாரப்பில் ஆலமீன்.

Comments

Popular posts from this blog

கேள்வி பதில்

கேள்வி பதில்

கேள்வி பதில்