Rosanaji

கேள்வி :1
நபி (ஸல்),கூறினார்கள்  மக்களுக்கு ஒரு காலம் வரும் அப்போது ஒரு முஸ்லீம் மனிதரின் செல்வங்களில் சிறந்ததாக இருக்கும் என்று எதை கூறினார்கள் ?
A )தங்கம்
B)மாடு
C)ஆடு
D)ஒட்டகம்

👏 பதில் :1

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: மக்களுக்கு ஒரு காலம் வரும். அப்போது ஒரு முஸ்லிமான மனிதரின் செல்வங்களிலேயே ஆடுதான் சிறந்ததாக இருக்கும். குழப்பங்களிலிருந்து தம் மார்க்க (விசுவாச)த்தைக் காப்பாற்றிக் கொள்ள அந்த ஆட்டை ஓட்டிக் கொண்டு அவர் மலை உச்சிக்கும், மழைத் துளிகள் விழும் (கணவாய்கள், பள்ளத்தாக்குகள் போன்ற) இடங்களுக்கும் சென்று வாழ்வார்.

{அறிவிப்பாளர்: அபூ ஸயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு,
ஸஹீஹுல் புஹாரி: 6495}

கேள்வி : 2
காணிக்கை தொழுகை   என்றால் என்ன ?

👏  பதில்: 2
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களை, எந்தப் பள்ளிவாசலுக்குள் நுழைந்தவுடன் பள்ளி காணிக்கை தொழுகையாக இரண்டு ரக்அத் தொழச் சொல்லி ஏவியுள்ளார்கள். இமாம் அவர்கள் பிரசங்கத்தை ஆரம்பித்து விட்டாலும் அல்லது ஆரம்பிக்காவிட்டாலும் இது பொருந்தும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் பள்ளிவாசலில் நுழையும் போதெல்லாம் இரண்டு ரக்அத் தொழுவதற்கு முன் உட்காராதீர்கள்” ஆதாரம் : முஅத்தா.Q24) தொழுகை

கேள்வி ?:(3)
கேள்வி கணக்கின்றி சுவர்க்கம் செல்லும் 70ஆயிரம் நபர்களில் உள்ளவராக யாரை நபி(ஸல் )அவர்கள் குறிப்பிட்டார்கள் ❓

👏பதில்( 3)
உக்காஸா( ரலி )
நூல் :புகாரி 5705

கேள்வி ?  4
மூஸாநபி எதை கொண்டு அடித்ததால் கடல் பிளந்தது ?

👏பதில் :4
உம் கைத்தடியினால் இந்தக் கடலை நீர் அடியும்” என்று மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம். (அவ்வாறு அடித்ததும் கடல்) பிளந்தது; (பிளவுண்ட) ஒவ்வொரு பகுதியும் பெரும் மலை போன்று ஆகிவிட்டது.
(அல்குர்ஆன் : 26:63)

கேள்வி :5
நீதிபதிகள் எத்தனை வகைப்படுவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?

👏பதில்: 5

நீதிபதிகள் மூன்று வகைப்படுவர்: அவர்களில் ஒரு வகையினர் சுவனத்திற்கும், இரு வகையினர் நரகத்திற்கும் செல்வர்: உண்மையை அறிந்து அதன் படி தீர்ப்பு வழங்கியவர் சுவனம் செல்வர். உண்மையை அறிந்திருந்தும் அநீதமாக தீர்ப்பு வழங்கியவரும், உண்மையை அறியாமலேயே தீர்ப்பு வழங்கியவரும் நரகம் புகுவார். (அறிவிப்பவா : புரைதா (ரலி), நூல் : அபூதாவுது)

கேள்வி: ❓6

போருக்கு செல்லாமல் இருப்பது யார் மீது குற்றமில்லை?

👏பதில்:6

குருடர் மீது குற்றமில்லை நொண்டியின் மீது குற்றமில்லை நோயாளியின் மீது குற்றமில்லை.

அல் குர் ஆ ன்  48:17

கேள்வி ?  (7)
வியாபாரம் செய்யும் போது குறைகளை மறைத்துப் பொய் சொன்னால் என்ன ஏற்படும்❓

👏பதில்:7

வியாபாரத்தில் அருள் வளம் நீக்கப்படும்.
( புகாரி 2079)

கேள்வி :8
மூன்று நாட்கள் மக்கள் இடம் பேசா மாட்டேன் என்று சத்தியம் செய்தவர் யார் ?

பதில்: 8

#மர்யம் #(அலை )
“ஆகவே, (அவற்றை) உண்டு, (ஆற்று நீரைப்) பருகி கண் குளிர்ந்து இருப்பீராக! பின்னர் எந்த மனிதரையேனும் நீர் பார்க்க நேரிட்டால், “மெய்யாகவே அர்ரஹ்மானுக்காக நான் நோன்பிருப்பதாக நேர்ந்திருக்கின்றேன்; ஆதலின் இன்றைய தினம் எந்த மனிதருடனும் பேச மாட்டேன்” என்று கூறும்.
(அல்குர்ஆன் : 19:26)

கேள்வி( 9)
வயது முதிர்ந்த காலத்தில் குழந்தை பிறக்கும் என்பதற்கு அடையாலமாக  ஜக்கரியா நபிக்கு எதை அல்லாஹ் கூறினான் ?

👏    பதில்  9
(அதற்கவர்) “என் இறைவனே! நீ எனக்கு ஓர் அத்தாட்சியை (இதற்காக) ஏற்படுத்துவாயாக!” என்று வேண்டினார்; “நீர் சவுக்கியத்துடன் இருக்கும் நிலையிலேயே மூன்று இரவு(பகல்)கள் நீர் மக்களுடன் பேச முடியாமலிருப்பீர்; (அதுவே) உமக்கு அத்தாட்சியாகும்” என்று கூறினான்.
(அல்குர்ஆன் : 19:10)

கேள்வி : (10)
நபி( ஸல்) அவர்கள் குர்ஆனை ஓதுவதை கேட்ட ஜின் கூட்டம் தம் சமுதாயதாரிடம் என்ன கூறியது? எவ்வாறு சென்றது❓

👏பதில்:(10)

வாயை மூடுங்கள் எனக் கூறியது . ஓதி முடிக்கப் பட்டதும் எச்சரிப்போராக தமது சமுதாயத்தாரிடம் சென்றது.

அல் குரான்  : 46:29

Comments

  1. நபியின் மனைவி மார்களில் கை நீளமானவர் யார்?*

    ReplyDelete
  2. சவ்தா(ரலி)எப்படிப்பட்ட பெண்ணாக இருந்தார்

    ReplyDelete
  3. )ஒரு முஸ்லிம் தம் (கொள்கைச்) சகோதரருக்கு செய்ய வேண்டிய கடமை என்ன?*

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கேள்வி பதில்

கேள்வி பதில்

கேள்வி பதில்