கேள்வி பதில்கள்
கேள்வி:1⃣
நம்பிக்கையாளர்கள் ஒருவரிடத்தில் எவ்வளவு பகைமை இருந்தாலும் அவருக்கு __________உடன் நடக்க வேண்டும் அது இறையச்சத்திற்கு மிக நெருக்கமாக்கும்..*
*A - பொறுமையுடன்..*
*B - நீதியுடன்..*
*C - மென்மையுடன்..*
*D - பணிவுடன்..*
பதில்:-01
B-நீதியுடன்
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُوْنُوْا قَوَّا امِيْنَ لِلّٰهِ شُهَدَآءَ بِالْقِسْطِ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَاٰنُ قَوْمٍ عَلٰٓى اَ لَّا تَعْدِلُوْا اِعْدِلُوْا هُوَ اَقْرَبُ لِلتَّقْوٰى وَاتَّقُوا اللّٰهَ اِنَّ اللّٰهَ خَبِيْرٌ بِمَا تَعْمَلُوْنَ
முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 5:8)
கேள்வி:2.
மறுமையில் தொழுகையின் விசாரணையின் போது அல்லாஹ் கூறுகிறான் என்னுடைய அடியானுக்கு கடமையான தொழுகையில் குறைவாக இருந்தால் ____________கொண்டு அதை நிறைவாக்குங்கள் என்று மலக்குகளிடம் கூறுகிறான்..❗*
*A - தர்மங்களை..*
*B - திக்ரை..*
*C - நோன்பை..*
*D - உபரியான வணக்கங்களை..*
*2.விடை:-உபரியான வணக்கங்களை..*
*நஸாயீ 467*
கேள்வி:3.
எவர்கள் நம்முடைய __________ செல்ல முயல்கின்றனரோ அவர்களுக்கு நம்முடைய நேரியவழிகளை திண்ணமாக நாம் காட்டுவோம் என அல்லாஹ் கூறுகிறான்❗*
*A - போர்ப் பாதையில்..*
*B - மார்கத்தில்..*
*C - அருளின் பால்..*
*D - வேதத்தின் பக்கம்...
3.விடை: B - மார்க்கத்தின் ..(அல்அன்கபூத்:69)*
கேள்வி:4.யார் ஒருவர் அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்கிறார்களோ அவர்__________செய்துவிட்டார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்..*
*A - பாவம்..*
*B - இனை கற்பித்து விட்டார்..*
*C - அநீதி..*
*D - குற்றம்..*
4.விடை;B - இணை கற்பித்துவிட்டார்..*
*திர்மிதீ-1455*
கேள்வி 5:
அல்லாஹ்வை திக்ர் செய்யாத மனிதனை ___________ மற்றும் ___________ன் நிலை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்...
5:விடை:- உயிருள்ளவரின் நிலை மற்றும் உயிரற்றவரின் நிலை..*
*புகாரி 6407
கேள்வி 6:
நரக நெருப்பின் எரிபொருல் எது ?முகமத் ரஃபிக் ம
அஜ்லான் இப்னு பைரோஸ்
6:பதில்
மனிதர்கள், கற்கள்.
#மனிதர்களையும் #கற்களையும் எரிபொருளாகக்கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்த நெருப்பு, இறைவனையும் அவன் வேதத்தையும் ஏற்க மறுக்கும்) காஃபிர்களுக்காகவே அது சித்தப்படுத்தப்பட்டுள்ளது
(அல்குர்ஆன் : 2:24)َ
கேள்வி 7:
கணவன் மனைவி விஷயத்தில் பிரச்சனை ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்..?
பதில் 7
கணவன் சார்பில் ஒருவரும் மனைவியின் சார்பில் ஒருவரும் சேர்ந்து சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும்..
ஆதாரம்-(குர்ஆன் 4:35)
கேள்வி 8:
ஒருவர் வீட்டுமுன்பு சுவர் எழுப்ப நினைத்தால் .. எத்தனை முலம் நடைபாதையாக விட்டு விடவேண்டும்?
பதில் :8
ஏழு முழங்கள்
2473. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நடைபாதை விஷயத்தில் மக்கள் சச்சரவு செய்தபோது, #ஏழு முழங்கள் நிலத்தைப் பொதுவழியாக (போக்குவரத்துச் சாலையாக)விட்டுவிட வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள்
கேள்வி:9
உங்களை நம்பி ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை
என்ன செய்ய வேண்டாம்
என அல்லாஹ் கூறுகிறான்..??அஜ்லான் இப்னு பைரோஸ்
பதில் :9
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَخُونُوا اللَّهَ وَالرَّسُولَ وَتَخُونُوا أَمَانَاتِكُمْ وَأَنتُمْ تَعْلَمُونَ
நம்பிக்கை கொண்டோரே! அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கும் இத்தூதருக்கும் மோசடி செய்யாதீர்கள்! உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டவற்றிலும் மோசடி செய்யாதீர்கள்!
திருக்குர்ஆன் 8:27
கேள்வி 10:
எத்தகைய பொறுப்பை மனிதன் சுமந்து கொண்டான் என
அல்-குர்ஆன் கூறுகிறது ???
பதில் 10:
إِنَّا عَرَضْنَا الْأَمَانَةَ عَلَى السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَالْجِبَالِ فَأَبَيْنَ أَن يَحْمِلْنَهَا وَأَشْفَقْنَ مِنْهَا وَحَمَلَهَا الْإِنسَانُ ۖ إِنَّهُ كَانَ ظَلُومًا جَهُولًا
வானங்களுக்கும், பூமிக்கும் மலைகளுக்கும் அமானிதத்தை நாம் முன்வைத்தோம். அதைச் சுமக்க அஞ்சி அவை மறுத்து விட்டன. மனிதன் அதைச் சுமந்து கொண்டான். அவன் அநீதி இழைப்பவனாகவும், அறியாதவனாகவும் இருக்கிறான்.
திருக்குர்ஆன் 33:72
Comments
Post a Comment