கேள்வி பதில்கள்

💖💖💖💖💖💖💖💖💖💖💖💖#அஸ்ஸலாமு_அலைக்கும்_வரஹ்மதுல்லாஹி_வ_பரகாத்துஹூ.💖💖💖💖💖💖💖💖💖💖

கேள்வி: 01

#நம்பிக்கை துரோகம் செய்தவர்களுக்கு நபி கொடுத்த தண்டனை என்ன ?

பதில்: 01

1501➖புகாரி

உரைனா எனும் கோத்திரத்தைச் சேர்ந்த சிலர் மதீனா வந்தபோது மதீனாவின் பருவநிலை ஒத்துக் கொள்ளாமல் நோயுற்றனர். எனவே ஸகாத்தாகப் பெறப்பட்ட ஒட்டகம் இருக்குமிடத்திற்குச் சென்று அதன் பாலையும் சி,,.... குடீப்பதற்கு அவர்களை நபி(ஸல) அவர்கள் அனுமதித்தார்கள். ஆனால், அவர்கள் அங்கு சென்று ஒட்டகம் மேய்ப்பவரைக் #கொலை செய்துவிட்டு #ஒட்டகங்களையும்_ஓட்டிச் சென்றனர். செய்தியறிந்த நபி(ஸல்) அவர்கள், அவர்களைப் பிடித்துவர ஆள் அனுப்பினார்கள். அவர்கள் பிடித்து வரப்பட்டதும் அவர்களின் #கைகளையும்_கால்களையும்_வெட்டினார்கள்; #கண் (இமை)களின் ஓரங்களில் #சூடிட்டார்கள்; அவர்களைக் #கருங்கற்கள்_நிறைந்த_ஹர்ரா எனுமிடத்தில் (பற்களால்) கற்களைப் (பற்றிப்) பிடித்துக் கொண்டிருக்கும்படிவிட்டுவிட்டார்கள்

கேள்வி: 02

அல்லாஹ்வின் பூமியிலேயே நோய் நொடிகள் அதிகமான பிரதேசமாக இருந்த ஊர் எது ? 
எதனால் நோய் அதிகமானதாக இருந்தது ?

பதில்: 02

1889⛔புகாரி

ஊர் மதீனா

நோய் இருந்த காரனம்
புத்ஹான் எனும் ஓடையில் மோசமான கெட்டுப்போன தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது

#கேள்வி▪️03

“ஸமூது” கூட்டத்தாருக்கு #எதை அத்தாட்சியாகக் கொடுத்திருந்தோம் என அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.??

அ: ஆடு

ஆ: மாடு

இ: ஒட்டகம்

ஈ அல்லாஹ் அறிந்தவன்

#பதில் ▪️03
   🌷இ

#பெண்_ஒட்டகத்தை

وَمَا مَنَعَنَاۤ اَنْ نُّرْسِلَ بِالْاٰيٰتِ اِلَّاۤ اَنْ كَذَّبَ بِهَا الْاَوَّلُوْنَ‌ وَاٰتَيْنَا ثَمُوْدَ النَّاقَةَ مُبْصِرَةً فَظَلَمُوْا بِهَا‌ وَمَا نُرْسِلُ بِالْاٰيٰتِ اِلَّا تَخْوِيْفًا‏
(நம்முடைய அத்தாட்சிகளை இவர்களுக்கு) முந்தியவர்களும் பொய்ப்பித்ததைத் தவிர (வேறு எதுவும் இவர்கள் கோரும்) அத்தாட்சிகளை அனுப்ப நம்மைத் தடுக்கவில்லை; (இதற்கு முன்) நாம் “ஸமூது” கூட்டத்தாருக்கு ஒரு பெண் ஒட்டகத்தைக் கண்கூடான அத்தாட்சியாகக் கொடுத்திருந்தோம்; அவர்களோ (வரம்பு மீறி) அதற்கு அநியாயம் செய்தனர்; (மக்களை) அச்சமூட்டி எச்சரிப்பதற்காவே அன்றி நாம் (இத்தகைய) அத்தாட்சிகளை அனுப்புவதில்லை.

(அல்குர்ஆன் : 17:59)

கேள்வி: 04

கவச ஆடை செய்வதை அல்லாஹ் யாருக்கு கற்றுக் கொடுத்தான்❓

அ: ஈஸா அலை

ஆ: தாவூத் அலை

இ: சுலைமான் அலை

ஈ இப்ராஹீம் அலை

பதில்: 04
  💐ஆ

தாவூத் நபி

ஆதாரம்: (குர்ஆன் 21:80)

கேள்வி : 05

நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு ஆணும் நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகளில் முதலாவது எதை கூறினார்கள்?

பதில்: 05

உங்கள் மனைவியரை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களாக ஆக்கிக் கொள்வதற்கு நீங்கள் கொடுக்கும் "மஹர்" தான்

ஆதாரம் : புஹாரி - 2721

கேள்வி : 06

சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளும் மக்களிடையே "நீதி" சொழுத்துவது எதற்கு சமம்?

A. நன்மை

B. அல்லாஹ்வை திக்ரு செய்தல்

C. தர்மம்

D. கடமை

பதில்: 06 

C. தர்மம்

ஆதாரம் : புஹாரி - 2707

கேள்வி : 07

ஓர் இறை நம்பிக்கையாளர் தம் பாவங்களை எவ்வாறு கருதுவார்?

பதில் : 07

மலைகளைப் போன்று பாரமாக

( அவர் ஒரு மலையடிவாரத்தில் உட்கார்ந்திருப்பதைப் போன்றும், அந்த மலை தம் மீது விழுந்து விடுமோ என அஞ்சுபவரைப் போன்றும் இருப்பார்)

❄ஆதாரம் : புஹாரி - 6308

கேள்வி: 08

நோன்பு எதற்காக கடமையாக்கப்பட்டது?

பதில் : 08

இறைவனை அஞ்சுவதற்காக

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப் பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப் பட்டுள்ளது.

(அல்குர்ஆன் 2:184)
La
கேள்வி: 09

அல்பகரா அத்தியாயத்தின் வட்டியைத் தடை செய்யும் வசனத்திலிருந்து இறுதி வசனம் இறங்கியபோது நபியவர்கள் மக்களிடம் வந்து எந்த வியாபாரம் தடை செய்யப்பட்டுவிட்டது என்றார்கள்?

அ)மது வியாபாரம்

ஆ)நாணய மாற்று வியாபாரம்
இ)ஸலம்
வியாபாரம்(மரத்திலுள்ள பழம் பக்குவமடையும் முன் விற்பது)

பதில் : 09

அ)மது வியாபாரம்

2226. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
பகரா அத்தியாயத்தின் (வட்டியைத் தடை செய்யும் வசனத்திலிருந்து இறுதி வசனம் வரை இறங்கியபோது நபி(ஸல்) அவர்கள் (மக்களிடம்) வந்து, 'மதுபான வியாபாரம் ஹராமாக்கப்பட்டுவிட்டது!' என்றார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 34. வியாபாரம்

கேள்வி: 10

தொழுகையில் உங்கள் பிரார்த்தனை ஏற்கப்பட அது மிகவும் தகுதியான இடம் எது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

பதில்: 10

#ஸஜ்தாவில்

ஸஜ்தாவில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள்! உங்கள் பிரார்த்தனை ஏற்கப்பட அது மிகவும் தகுதியானதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி­)
(நூல் : முஸ்லி­ம் 824)

Comments

  1. எதைப்பற்றி நினைத்து சுவனவாசிகள் கைசேதப்படுவார்கள்?

    ReplyDelete
  2. தொழுகையின் கடைசி தஷஹ்ஹுத்தில் நான்கு விசயங்களில் இருந்து அல்லாஹ்விடம் அடைக்கலம் தேடுங்கள் என முஹம்மது நபி(ஸல்) கூறினார்கள். அந்த நான்கு விசயங்கள் யாவை?

    ReplyDelete
    Replies
    1. வாழ்வின் சோதனை மரண வேதனை கப்ரு வேதனை தஜ்ஜாலின் குழப்பம்

      Delete
  3. எந்தப் பெண்ணாவது தன் கணவனை எரிச்சலூட்டினால் சுவனத்தில் அவனுக்காக இருக்கும் ஹூருலீன் பெண் என்ன சொல்வாள்?

    ReplyDelete
    Replies
    1. Avargal meethu naasam undagattum

      Delete
    2. Enoda name j.ameerdeen..
      9585028963
      Whatsapp number

      Delete
  4. 03 விடயங்களை கண்களால் பார்த்துக்கொண்டிருந்தாலும் கூட அல்லாஹூதஆலா நன்மை வழங்குகிறான். அவை மூன்றும் என்ன?

    ReplyDelete
    Replies
    1. அல் குர்ஆனை பார்த்து கொண்டு இருந்தாலும்,கஃபாவை பார்த்து கொண்டு இருப்பது ம்,பெற்றோரை புண் முறுவலாக பார்த்தாலும் நன்மை கிடைக்கும்.

      Delete
  5. உலகத்தில் அதிக இன்பங்களை... கொடுக்கப்பட்டவர் யார்?

    ReplyDelete
  6. சொர்க்கத்தில் மக்களை மிக அதிகமாக நுழைய செய்வது எது?

    ReplyDelete
    Replies
    1. இறையச்சமும் ,
      நற்குணமும்

      Delete
  7. விதியை மறுப்போருடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்?

    ReplyDelete
    Replies
    1. இந்த question க்கு ஆதாரத்துடன் எனக்கு பதில் வேண்டும்

      Delete
  8. எந்த மூன்று விஷங்களுக்காக அரபிகளை நேசிக்க வேண்டும்?

    ReplyDelete
  9. குரானில் எத்தனை முறை யா அய்யுன்னபியு என்று அல்லாஹ் கூறுகிறான்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கேள்வி பதில்

கேள்வி பதில்

கேள்வி பதில்