கேள்வி பதில்கள்

💖💖💖💖💖💖💖💖💖💖💖💖#அஸ்ஸலாமு_அலைக்கும்_வரஹ்மதுல்லாஹி_வ_பரகாத்துஹூ.💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

    #கேள்வி  1🧚

#எது இறைநம்பிக்கையில் பாதியாகும்?

    #பதில்  1🧚

தூய்மை இறைநம்பிக்கையில் பாதியாகும்.

(முஸ்லிம் 381)

    #கேள்வி 2🧚

என்னவென்று இறைவனைத் துதிப்பது நன்மை மற்றும் தீமைகளை நிறுக்கக்கூடிய தராசை நிரப்பக்கூடியதாகும்?

    #பதில் 2🧚

அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!)

(முஸ்லிம் 381)

    #கேள்வி 3🧚

#எந்த_வார்த்தை வானங்கள் மற்றும் பூமிக்கிடையேயுள்ள இடத்தை நிரப்பிவிடக்கூடிய அளவிற்கு அபரிமிதமான நன்மைகளைக் கொண்டதாகும்?

    #பதில் 3🧚

சுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி
(அல்லாஹ் தூயவன்; எல்லாப் புகழும் அவனுக்கே உரியது)

(முஸ்லிம் 381)

    #கேள்வி 4🧚

#எது வழிகாட்டும்ஒளியாகும்?

    #பதில் 4🧚

தொழுகை

(முஸ்லிம் 381)

    #கேள்வி 5🧚

#எது சான்றாகும்.

    #பதில் 5🧚

தானதர்மம்

(முஸ்லிம் 381)

    #கேள்வி 6🧚

#எது ஒரு வெளிச்சமாகும்?

    #பதில் 6🧚

பொறுமை

(முஸ்லிம் 381)

    #கேள்வி 7🧚

#எது ஒன்று நமக்கு ஆதரவான சான்றாகும்; அல்லது எதிரான சான்றாகும்?

    #பதில் 7🧚

குர்ஆன் ஒன்று உனக்கு ஆதரவான சான்றாகும்; அல்லது எதிரான சான்றாகும்.

(முஸ்லிம் 381)

    #கேள்வி 8🧚

மக்கள் அனைவரும் காலையில் புறப்பட்டுச் சென்று தம்மை விற்பனை செய்கின்றனர். சிலர் தம்மை ______ விற்று நரகத்திலிருந்து தம்மை விடுவித்துக் கொள்கின்றனர். வேறு சிலர் ________ விற்று தம்மை அழித்துக்கொள்கின்றனர்.

    #பதில் 8🧚

மக்கள் அனைவரும் காலையில் புறப்பட்டுச் சென்று தம்மை விற்பனை செய்கின்றனர். சிலர் தம்மை (இறைவனிடம் விற்று நரகத்திலிருந்து தம்மை) விடுவித்துக் கொள்கின்றனர். வேறு சிலர் (ஷைத்தானிடம் விற்று) தம்மை அழித்துக்கொள்கின்றனர்.

381. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தூய்மை இறைநம்பிக்கையில் பாதியாகும். அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!) என்(று இறைவனைத் துதிப்)பது, (நன்மை மற்றும் தீமைகளை நிறுக்கக்கூடிய) தராசை நிரப்பக்கூடியதாகும். சுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி  (அல்லாஹ் தூயவன்; எல்லாப் புகழும் அவனுக்கே உரியது) என்(று அவனைத் துதிப்)பது வானங்கள் மற்றும் பூமிக்கிடையேயுள்ள இடத்தை நிரப்பிவிடக்கூடிய (அளவிற்கு அபரிமிதமான நன்மைகளைக் கொண்ட)தாகும். தொழுகை (வழிகாட்டும்)ஒளியாகும். தானதர்மம் சான்றாகும். பொறுமை ஒரு வெளிச்சமாகும். குர்ஆன் ஒன்று உனக்கு ஆதரவான சான்றாகும்; அல்லது எதிரான சான்றாகும். மக்கள் அனைவரும் காலையில் புறப்பட்டுச் சென்று தம்மை விற்பனை செய்கின்றனர். சிலர் தம்மை (இறைவனிடம் விற்று நரகத்திலிருந்து தம்மை) விடுவித்துக் கொள்கின்றனர். வேறு சிலர் (ஷைத்தானிடம் விற்று) தம்மை அழித்துக்கொள்கின்றனர்.
இதை அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 2. தூய்மை

    #கேள்வி 9🧚

தொழுகை அறிவிப்பின் வாசகங்களை ________ இகாமத்தின் வாசகங்களை __________ கூறும்படி பிலால் (ரலி) அவர்கள் கட்டளையிடப்பட்டார்கள்.

    #பதில் 9🧚

622. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
தொழுகை அறிவிப்பின் வாசகங்களை இரட்டையாகவும் இகாமத்தின் வாசகங்களை ஒற்றைப்படையாகவும் கூறும்படி பிலால் (ரலி) அவர்கள் கட்டளையிடப்பட்டார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 4. தொழுகை

    #கேள்வி 10🧚

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய பள்ளிவாசலுக்கு இரு தொழுகை அறிவிப்பாளர்கள் இருந்தனர். அவர்கள் யார்?

    #பதில் 10 🧚

624. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களு(டைய பள்ளிவாசலு)க்கு இரு தொழுகை அறிவிப்பாளர்கள் இருந்தனர். ஒருவர் பிலால் (ரலி) அவர்கள்; மற்றொருவர் கண்பார்வை இழந்த இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாக ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 4. தொழுகை

Comments

Popular posts from this blog

கேள்வி பதில்

கேள்வி பதில்

கேள்வி பதில்