கேள்வி பதில்கள்

#கேள்வி :1
எது அல்லாஹ்வை விட்டும் உங்களை
தூரமாக்கி விட்டது?
அ. பேராசை
ஆ. குடும்பம்

பதில் :1

#பேராசை

ஒருவருக்கொருவர் அதிகமதிகமாகத்
தேடிக் கொள்ளும் பேராசை
(அல்லாஹ்வை விட்டும்) உங்களை
தூரமாக்கி விட்டது’’ (திருக்குர் ஆன்–
102:1)

கேள்வி :2
ஷைத்தான்களின் சகோதரர்கள் யார்?
அ. தர்க்கிப்பவர்கள்
ஆ. வீண்விரயம் செய்பவர்கள்

பதில் :2

வீண்விரயம் செய்பவர்கள்
மேலும் நீர் வீணாக்க வேண்டாம்!
வீணாக்குபவர்கள் திண்ணமாக
ஷைத்தான்களின் சகோதரர்களாக
இருக்கின்றனர்.” (17:26,27)

கேள்வி :3

கோடிட்ட இடத்தை நிரப்புக:

உங்களது இறைவன்_______க்கு மலைகளிலும், மரங்களிலும், மக்கள் கட்டும் கட்டிடங்களிலும்_______களை அமைத்துக் கொள்ளும்படி அறிவூட்டினான்.

பதில் : 3

#தேனீக்கு_கூடுகளை

உங்களது இறைவன் தேனீக்கு மலைகளிலும், மரங்களிலும், மக்கள் கட்டும் கட்டிடங்களிலும் கூடுகளை அமைத்துக் கொள்ளும்படி அறிவூட்டினான்.
(அல்குர்ஆன் : 16:68)

கேள்வி :4

அல்லாஹ் குர்ஆனில் மூச்சித்திணற ஓடுபவற்றின் மீது சத்தியம் செய்கிறான்.#எது மூச்சித்திணற ஓடுவது என்பது எதை குறிக்கும்?

ஆப்ஷன் :

A.குதிரை

B.நாய்

C.சிறுத்தை

D.அல்லாஹ் அறிந்தவன்.

பதில் :4

#குதிரை

மூச்சுத் திணர அதிவேகமாகச் செல்லும் குதிரைகள் மீது சத்தியமாக!
(அல்குர்ஆன் : 100:1)

கேள்வி :5
வீண்வாதம் செய்து கொண்டிருக்கிறார்களோ அவர்கள்
எதில் இருக்கிறார்கள்?
அ.நரகத்தில்
ஆ.வழிகேட்டில்
இ.அறியாமையில்

பதில் :5

நெடிய #வழிகேட்டிலேயே
அதன் மேல் நம்பிக்கை கொள்ளாதவர்கள், அதைப்பற்றி அவசரப்படுகின்றனர்; ஆனால் நம்பிக்கை கொண்டவர்கள் அதனை (நினைத்து) பயப்படுகிறார்கள்; நிச்சயமாக அது உண்மையே என்பதை அவர்கள் அறிகிறார்கள்; அறிந்து கொள்க: அவ்வேளை குறித்து எவர்கள் வீண்வாதம் செய்து கொண்டிருக்கிறார்களோ அவர்கள் நெடிய வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.
அல்குர்ஆன் : 42:18.

கேள்வி:6

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நன்மையிலும் தீமையிலும் (இஸ்லாத்திலும், அறியாமைக்காலத்திலும்) மக்கள் அனைவரும்_______ப்  பின்பற்றுபவர்கள் ஆவர்.

பதில்:6

#குறைஷியரைப்

3716. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நன்மையிலும் தீமையிலும் (இஸ்லாத்திலும், அறியாமைக்காலத்திலும்) மக்கள் அனைவரும் குறைஷியரைப் பின்பற்றுபவர்கள் ஆவர்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 33. ஆட்சியதிகாரம்

கேள்வி :7
#அமானிதம் பாழ்படுத்தப்பட்டால்  மறுமைநாளை எதிர்பார்க்குமாறு நபியவர்கள் கூறினார்கள். #அமானிதம் எவ்வாறு பாழ்படுத்தப்படும்?

பதில் :7

#'எந்தக் காரியமாயினும் அது, தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பாரும்'

59. 'ஓர் அவையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்களுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தபோது அவர்களிடம் நாட்டுப் புறத்து அரபி ஒருவர் வந்தார். 'மறுமை நாள் எப்போது?' எனக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது (அங்கிருந்த) மக்களில் சிலர் 'நபி(ஸல்) அவர்கள் அம்மனிதர் கூறியதைச் செவியுற்றார்கள்; எனினும் அவரின் இந்தக் கேள்வியை அவர்கள் விரும்பவில்லை' என்றனர். வேறு சிலர், 'அவர்கள் அம்மனிதர் கூறியதைச் செவியுறவில்லை' என்றனர். முடிவாக நபி(ஸல்) அவர்கள் தங்களின் பேச்சை முடித்துக் கொண்டு, 'மறுமை நாளைப் பற்றி (என்னிடம்) கேட்டவர் எங்கே?' என்று கேட்டார்கள். உடனே (கேட்டவர்)' இறைத்தூதர் அவர்களே! இதோ நானே' என்றார். அப்போது கூறினார்கள்.' அமானிதம் பாழ்படுத்தப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர் பார்க்கலாம்.' அதற்கவர், 'அது எவ்வாறு பாழ் படுத்தப்படும்?' எனக் கேட்டதற்கு, 'எந்தக் காரியமாயினும் அது, தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பாரும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 3. கல்வியின் சிறப்பு

கேள்வி: 8
மனிதன் அதிகமாகவே # என்ன செய்கின்றவனாக இருக்கின்றான்.
அ. பாவம்
ஆ. தர்க்கம்

பதில்: 8
தர்க்கம்
மனிதன் அதிகமாகவே தர்க்கம் செய்கின்றவனாக இருக்கின்றான். (ஸுரதுல் கஹ்ஃபு: 54)

கேள்வி :9
பூமியில் பணிவுடன் நடப்பவர்கள் மூடர்கள் அவர்களுடன் பேசி வாதிட முற்பட்டால் என்ன சொல்லி விலகிப் போய்விடுவார்கள்?

பதில் :9

#ஸலாம்

இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள் மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால்'ஸலாம் ' (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள் (அல்குர்ஆன் 6:35)

கேள்வி :10
யார் உங்களோடு வீண் தர்க்கம் செய்யுமாறு தூண்டுகிறார்கள்?
அ. முஷ்ரிக்குகள் தங்கள் நண்பர்களை
ஆ. ஷைத்தான்கள் தங்கள் நண்பர்களை
இ. பாஸிக்குகள் தங்கள் நண்பர்களை

பதில் 10

ஆ. #ஷைத்தான்கள் தங்கள் நண்பர்களை..

எதன்மீது. (அறுக்கும்போது) அல்லாஹ்வின் பெயர் கூறப்படவில்லையோ அதைப் புசியாதீர்கள் - நிச்சயமாக அது பாவமாகும்; நிச்சயமாக ஷைத்தான்கள் தங்கள் நண்பர்களை உங்களோடு (வீண்) தர்க்கம் செய்யுமாறு தூண்டுகிறார்கள் - நீங்கள் அவர்களுக்கு வழிபட்டால், நிச்சயமாக நீங்களும் முஷ்ரிக்குகள் (இணைவைப்போர்) ஆவீர்கள்.

அல்குர்ஆன் :6:121.

Comments

Popular posts from this blog

கேள்வி பதில்

கேள்வி பதில்

கேள்வி பதில்