கேள்வி பதில்கள்

▓࿇▓ கேள்வி(1)▓࿇▓

யார் ஒருவர் செல்வங்கள் உடைய அனாதைகளை பராமரிப்பவராக இருந்தால், அந்த செல்வங்களைக் எவ்வாறு நடைமுறை படுத்த வேண்டும்?

✪✭✪பதில்(1)✪✭✪

யாராவது ஒருவர் செல்வங்கள் உடைய அனாதைகளை பராமரிப்பவராக இருந்தால், #அந்த_செல்வங்களைக்_கொண்டு_வியாபாரம்_செய்யுங்கள். ஜக்காத் அதனை (செல்வங்களை) #விழுங்கிவிடும்வரை #விட்டுவைக்காதீர்கள்’ என அல்லாஹ்வின் தூதர் அண்ணல் ஆதார நூல்: ஸூனன் திர்மிதி. பக்கம் 69, ஹதீஸ் எண்: 644)

▓࿇▓ கேள்வி(2)▓࿇▓

முஃமீன்களிடமிருந்து  பகரமாக அல்லாஹ் விலைக்கு வாங்கிக் கொண்டவைகள் என்னென்ன?

✪✭✪பதில்(2)✪✭✪

நம்பிக்கை கொண்டோரிடமிருந்து அவர்களின் #உயிர்களையும், #செல்வங்களையும் சொர்க்கத்திற்குப் பகரமாக அல்லாஹ் விலைக்கு வாங்கிக் கொண்டான்.

9:111

▓࿇▓ கேள்வி(3)▓࿇▓

முஹம்மதே! அவர்களின் செல்வங்களில் தர்மத்தை எடுப்பீராக! அதன் மூலம் அவர்களைத் ___________, _______________! அவர்களுக்காகப் பிரார்த் தனை செய்வீராக! உமது பிரார்த்தனை அவர்களுக்கு மன அமைதி அளிக்கும். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.

✭✪பதில்(3)✪✭✪

முஹம்மதே! அவர்களின் செல்வங்களில் தர்மத்தை எடுப்பீராக! அதன் மூலம் அவர்களைத் #தூய்மைப்படுத்தி, #பரிசுத்தமாக்குவீராக! அவர்களுக்காகப் பிரார்த் தனை செய்வீராக! உமது பிரார்த்தனை அவர்களுக்கு மன அமைதி அளிக்கும். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.

9:103

▓࿇▓ கேள்வி(4)▓࿇▓

நிச்சயமாக உங்களுக்கு முன்னால் இருந்த வேதம் கொடுக்கப்பட்டவர்கள் எத்தனை  பிரிவுகளாக பிரிந்தனர்.

✪✭✪பதில்(4)✪✭✪

நிச்சயமாக உங்களுக்கு முன்னால் இருந்த வேதம் கொடுக்கப்பட்டவர்கள் #72 பிரிவுகளாக பிரிந்தனர்.

(ஆதார நூல்: ஸூனன் அபூதாவூத் – 4580, ஷஹீஹ் ஸூனன் அபீதாவூத் – 4607)

▓࿇▓ கேள்வி(5)▓࿇▓

இந்த சமூகம் எத்தனை  ஆக பிரியும்.

அதில் எத்தனை  நரகம் செல்லும்.

எத்தனை  சுவனம் செல்லும்.

✪✭✪பதில்(5)✪✭✪

நிச்சயமாக உங்களுக்கு முன்னால் இருந்த வேதம் கொடுக்கப்பட்டவர்கள் #72 பிரிவுகளாக பிரிந்தனர்.
இந்த சமூகம் #73 ஆக பிரியும்.
அதில் #72 நரகம் செல்லும்.
#ஒன்று சுவனம் செல்லும்.
அது ‘அல்-ஜமாஅ’ (கூட்டமைப்பு) ஆகும்’

(ஆதார நூல்: ஸூனன் அபூதாவூத் – 4580, ஷஹீஹ் ஸூனன் அபீதாவூத் – 4607)

▓࿇▓ கேள்வி(6)▓࿇▓

அரிக்கப்பட்டு விழுந்து விடும் கட்டடத்தை கரை ஓரத்தில் கட்டி அதனுடன் நரகத்தில் சரிந்து விழுந்து விட்டவன்  அநீதி இழைத்தவனின் உள்ளம் எவ்வாறு இருக்கும்?

✪✭✪பதில்(6)✪✭✪

அவர்களின் உள்ளங்கள் வெடித்துச் சிதறினால் தவிர அவர்கள் கட்டிய கட்டடம் அவர்களின் உள்ளங்களில் உள்ள #சந்தேகத்தின்_அடையாளமாக இருந்து கொண்டே இருக்கும். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

9:110

▓࿇▓ கேள்வி(7)▓࿇▓

அல்லாஹ் யாரை #இரண்டு_தடவை_தண்டிப்பான் பின்னர் அவர்களுக்கு கடும் வேதனைக்கு உட்படுத்தப்படுவான்?

✪✭✪பதில்(7)✪✭✪

உங்களைச் சுற்றியுள்ள கிராமவாசிகளிலும், மதீனாவாசிகளிலும் #நயவஞ்சகர்கள் உள்ளனர். அவர்கள் #நயவஞ்சகத்தில் நிலைத்துள்ளனர். (முஹம்மதே!) அவர்களை நீர் அறிய மாட்டீர்! நாமே அவர்களை அறிவோம். அவர்களை #இரண்டு_தடவை_தண்டிப்போம். பின்னர் அவர்கள் கடும் #வேதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

9:101

࿇▓ கேள்வி(8)▓࿇▓

வஹ்ன் என்றால் என்ன?

✪✭✪பதில்(8)✪✭✪

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
” #இவ்வுலத்தின்_மீது_அதிகமான_பற்றும் #மரணத்தை_அஞ்சுவதும்.” என்பதாகும்.

நூல்- அபூதாவுத்

▓࿇▓ கேள்வி(9)▓࿇▓

‘ஹூருல் ஈன்’ எனப்படும்  மங்கையர்கள் தோற்றம்  எவ்வாறு (அழகு) இருக்கும்?

✪✭✪பதில்(9)✪✭✪

நபி (ஸல்) கூறினார்கள்:
‘ஹூருல் ஈன்’ எனப்படும் அகன்ற #மான்_போன்ற_விழிகளையுடைய_மங்கையரிலிருந்து இரண்டு மனைவிமார்கள் இருப்பார்கள். அவர்களின் #கால்களின்_எலும்பு_மஜ்ஜைகள்_காலின்_எலும்புக்கும்_சதைக்கும்_அப்பாலிருந்து வெளியே_தெரியும்.

புகாரி 3254

▓࿇▓ கேள்வி(10)▓࿇▓

‌قَالَ مَا مَنَعَكَ اَلَّا تَسْجُدَ اِذْ اَمَرْتُكَ‌  قَالَ 
“நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?” என்று அல்லாஹ் கேட்டான்; அதற்கு இப்லீஸ் என்ன பதில் கூறினான்.

✪✭✪பதில்(10)✪✭✪

اَنَا خَيْرٌ مِّنْهُ‌  خَلَقْتَنِىْ مِنْ نَّارٍ وَّخَلَقْتَهٗ مِنْ طِيْنٍ‏ 
“நான் அவரை ஆதமைவிட மேலானவன் - என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்” என்று இப்லீஸ் பதில் கூறினான்.
(அல்குர்ஆன் : 7:12)

Comments

Popular posts from this blog

கேள்வி பதில்

கேள்வி பதில்

கேள்வி பதில்