கேள்வி பதில்கள்
💕💕💕بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم💕💕💕
🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
#அஸ்ஸலாமு_அலைக்கும்_வரஹ்மதுல்லாஹி_வபரகாத்துஹு.
🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋
கேள்வி :1
நபி(ஸல்) அவர்கள் "சத்தியம்" செய்வதற்கு அதிகமாக பயன்படுத்திய வார்த்தை எது?
A. என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீதாணையாக
B. இப்றாஹீம் (அலை) அவர்களின் இறைவன் மீதானையாக
C. உள்ளங்களை புரட்டக்கூடியவனின் மீதானையாக
D. அர்ஷின் அதிபதியின் மீதானையாக
#rpt
பதில் :1
C. உள்ளங்களை புரட்டக்கூடியவனின் மீதானையாக
❄ஆதாரம் : புஹாரி - 7391
கேள்வி :2
"அல்லாஹ்வை விட பொறுமையாளர் வேறு யாருமில்லை" என்பதை எந்த விசயத்திற்காக அல்லாஹ் பொறுமையாக இருப்பதை உதாரணமாக நபி(ஸல்) கூறினார்கள்?
A. மறுமைநாளை மக்கள் மறுப்பது
B. அல்லாஹ்விற்கு குழந்தை இருப்பதாக கூறுவது
C. குர்ஆனை இட்டுக்கட்டப்பட்டது என நம்புவது
D. அவனது தூதர்களை மறுப்பது
#rpt
பதில் : 2
B. அல்லாஹ்விற்கு குழந்தை இருப்பதாக கூறுவது
❄ஆதாரம் : புஹாரி - 7378
கேள்வி :3
இறை அருளை விட்டு தூரமான சமுதாயத்தினர் யார்?
அ)ஆது சமுதாயத்தினர்
ஆ)ஸமூது சமுதாயத்தினர்
இ)அ மற்றும் ஆ
பதில் :3
இ)அ மற்றும் ஆ
❄ஆதாரம் :அல் குர்ஆன் 11:59,60
கேள்வி :4
நபி(ஸல்) அவர்களின் அறிவுரை:
உனக்கு இது இல்லையென்றால் நீ விரும்பியதை எல்லாம் செய்து கொள்.
எது?
பதில் :4
வெட்கம்
❄ஆதாரம் : புஹாரி - 3483
கேள்வி :5
ஒவ்வோர் இறைத் தூதருக்கும் பிரத்யேகமான தூய தோழர் ஒருவர் உண்டு. நபி (ஸல்) அவர்களின் பிரத்யேகமான தூய தோழர் யார்?
அ. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி)
ஆ. ஸுபைர் (ரலி)
இ. அலீ பின் அபீதாலிப் (ரலி)
பதில் :5
ஆ) ஸுபைர் (ரலி)
அனைத்துக் குலங்களும் நம்மை எதிர்த்துப் போரிடும் (இந்த அகழ்ப் போர்) நால் அந்தக் குலத்தாரின் செய்தியை என்னிடம் (உளவறிந்து) கொண்டு வருபவர் யார்?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ஸுபைர் (ர) அவர்கள், ‘நான் (உளவறிந்து கொண்டு வருகிறேன்)’ என்று கூறினார்கள். பிறகு (மீண்டும்) நபி (ஸல்) அவர்கள், ‘அந்தக் குலத்தாரின் செய்தியை என்னிடம் (உளவறிந்து) கொண்டு வருபவர் யார்?’ என்று கேட்க, ஸுபைர் (ர) அவர்கள், ‘நான்’ என்று கூறினார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள், ‘ஒவ்வோர் இறைத் தூதருக்கும் பிரத்யேகமான தூய தோழர் ஒருவர் உண்டு. என் பிரத்யேகமான தூய தோழர் ஸுபைர் ஆவார்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி),
❄ஆதாரம் : புகாரி (2846)
கேள்வி :6
நபி (ஸல்) அவர்கள் ஒரு வார்த்தை பேசினால் அது அவர்களிடம் நன்கு புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக எத்தனை முறை அதை திரும்பச் சொல்வார்கள்?
பதில் :6
#மும்முறை
நபி (ஸல்) அவர்கள் ஒரு வார்த்தை பேசினால் அது அவர்களிடம் நன்கு புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக மும்முறை அதை திரும்பச் சொல்வார்கள். ஏதாவது ஒரு சமூகத்தாரிடம் சென்றால் மும்முறை ஸலாம் கூறுவார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி )
❄ஆதாரம் :புகாரி (95)
கேள்வி :7
ஃபஸாத் என்றால் என்ன?
பதில் :7
وَاِذَا تَوَلّٰى سَعٰى فِى الْاَرْضِ لِيُفْسِدَ فِيْهَا وَيُهْلِكَ الْحَـرْثَ وَالنَّسْلَ وَاللّٰهُ لَا يُحِبُّ #الْفَسَادَ
கலகம் (குழப்பம்)
அவன் (உம்மை விட்டுத்)திரும்பியதும், பூமியில் கலகத்தை உண்டாக்கவே முயல்வான்; விளை நிலங்களையும், கால்நடைகளையும் அழிக்க முயல்வான்; கலகத்தை அல்லாஹ் விரும்புவதில்லை.
❄ஆதாரம் :(அல்குர்ஆன் : 2:205)
பதில் :7
وَاِذَا تَوَلّٰى سَعٰى فِى الْاَرْضِ لِيُفْسِدَ فِيْهَا وَيُهْلِكَ الْحَـرْثَ وَالنَّسْلَ وَاللّٰهُ لَا يُحِبُّ #الْفَسَادَ
கலகம் (குழப்பம்)
அவன் (உம்மை விட்டுத்)திரும்பியதும், பூமியில் கலகத்தை உண்டாக்கவே முயல்வான்; விளை நிலங்களையும், கால்நடைகளையும் அழிக்க முயல்வான்; கலகத்தை அல்லாஹ் விரும்புவதில்லை.
❄ஆதாரம் :(அல்குர்ஆன் : 2:205)
கேள்வி :8
ஆதமுடைய இரு குமாரர்கள் ஒரு வணக்கம் புரிந்தனர் ஒருவரிடமிருந்து அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. மற்றவரிடமிருந்து அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை
யாரிடமிருந்து எதனடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்கிறான் இறைவன்?
பதில் :8
அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வை நான் அஞ்சுகிறேன் என்று கூறியவரிடமிருந்து இறையச்ச அடிப்படையில் ஏற்கப்பட்டது
❄ஆதாரம் :(அல்குர்ஆன் -5:27,28)
கேள்வி :9
மறுமை நாளில் அல்லாஹ்விடம் அந்தஸ்தில் மிக மோசமானவர் யார்?
பதில் :9
யாருடைய தீங்கை அஞ்சி மக்கள் அவருடன் பழகாமல் விட்டு விடுவார்களோ அவர்கள்...!!!
❄ஆதாரம் : புஹாரி - 6032
கேள்வி :10
சகல தூதர்களின் வரலாறுகளையும் நபியவர்களுக்கு அல்லாஹ் அறிவித்துக் கொடுத்துள்ளான் ..???
சரியா. ??? தவறா ..???
பதில் : 10
தவறு...
وَلَقَدْ اَرْسَلْنَا رُسُلًا مِّنْ قَبْلِكَ مِنْهُمْ مَّنْ قَصَصْنَا عَلَيْكَ وَمِنْهُمْ مَّنْ لَّمْ نَقْصُصْ عَلَيْكَ وَمَا كَانَ لِرَسُوْلٍ اَنْ يَّاْتِىَ بِاٰيَةٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ فَاِذَا جَآءَ اَمْرُ اللّٰهِ قُضِىَ بِالْحَقِّ وَخَسِرَ هُنَالِكَ الْمُبْطِلُوْنَ
திட்டமாக நாம் உமக்கு முன்னர் தூதர்களை அனுப்பியிருக்கின்றோம்; அவர்களில் சிலருடைய வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம்; இன்னும் எவர்களுடைய வரலாற்றை உமக்குக் கூறவில்லையோ (அவர்களும்) அத்தூதர்களில் இருக்கின்றனர்; (இவ்விருசாராரில்) எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்த அத்தாட்சியையும் கொண்டு வருவதற்கு (அதிகாரமும்) இல்லை; ஆகவே அல்லாஹ்வுடைய கட்டளைவரும் போது, (அனைவருக்கும்) நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும்; அன்றியும், அந்த இடத்தில் பொய்யர்கள் தாம் நஷ்டமடைவார்கள்.
❄ஆதாரம் : (அல்குர்ஆன் : 40:78)
கியாம நாளில் நயவஞ்சகர்கள் ஸூஜுதில் விழமுடியாமல் இடுப்பு எவ்வாறு இருக்கும்
ReplyDeleteநாட்டு கழுதை
Deleteகேள்வி இல 08
ReplyDelete🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐🌺🌺🌺🌺🌺🌸🌸🌸
அல் குரானில் எந்தனை பெண்களுக்கு வஹி அருளியதாக கூறப்பட்டுள்ளது.??அவர்கள் யார்?????