கேள்வி பதில்
கேள்வி ✨ 1
அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே #மிகவும்_வெறுப்புக்குரியவன்_யார்?
பதில் ✨ 1
#கடுமையாக_எப்போது_பார்த்தாலும்_சச்சரவு_செய்து_கொண்டிருப்பவனேயாவான்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் கடுமையாக (எப்போது பார்த்தாலும்) சச்சரவு செய்து கொண்டிருப்பவனேயாவான்.
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 46. அநீதிகளும் அபகரித்தலும்
ஹதீஸ் எண் : 2457.
கேள்வி ✨ 2
நபி ஸல் அலை தனது போர் கவசத்தை #யாரிடம்_எதற்கு_பகரமாக_அடகு_வைத்தார்கள்?
பதில் ✨ 2
#யூதரிடம்
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு யூதரிடமிருந்து உணவுப் பொருளை வாங்கினார்கள். (அதற்காக) தம் கவசத்தை அந்த யூதரிடம் அடகு வைத்தார்கள்.
ஸஹீஹ் புகாரி
அத்தியாயம் : 48. அடைமானம்
ஹதீஸ் எண் : 2514.
#வாற்_கோதுமைக்குப்_பகரமாக_அடகு_வைத்திருந்தார்கள்
அனஸ்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் போர்க் கவசத்தை வாற் கோதுமைக்குப் பகரமாக அடகு வைத்திருந்தார்கள். நான் நபி(ஸல்) அவர்களிடம் வாற்கோதுமை ரொட்டியையும் வாசனை நீங்கிய உருகிய கொழுப்பையும் கொண்டு சென்றேன். 'முஹம்மதின் வீட்டாரிடம், அவர்கள் ஒன்பது வீட்டினராக இருந்தும் கூட ஒரேயொரு ஸாஉ (தானியம் அல்லது பேரீச்சம் பழம்) தவிர, காலையிலோ மாலையிலோ வேறெதுவும் இருந்ததில்லை' என்று நபி(ஸல்) அவர்கள் கூற கேட்டிருக்கிறேன்.
ஸஹீஹ் புகாரி
அத்தியாயம் : 48. அடைமானம்
ஹதீஸ் எண் : 2508.
கேள்வி ✨ 3
நயவஞ்சகனின் அடையாளங்கள் #என்னென்ன?
பதில் ✨ 3
#பேசும்போது_பொய்_பேசுவான்
#மோசடி_செய்வான்
#வாக்களித்தால்_மாறு_செய்வான்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நயவஞ்சகனின் அடையாளம் மூன்றாகும்: அவன் பேசும்போது பொய் பேசுவான். அவனிடம் ஒரு பொருள் (அல்லது பணி) நம்பி ஒப்படைக்கப்பட்டால் (அதில்) மோசடி செய்வான். அவன் வாக்களித்தால் மாறு செய்வான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி
அத்தியாயம் : 52. சாட்சியங்கள்
ஹதீஸ் எண் : 2682.
கேள்வி ✨ 4
அநீதி, மறுமை நாளில் #எவ்வாறு_காட்சி_தரும்?
பதில் ✨ 4
#பல_இருள்களாகக்_காட்சி_தரும்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அநீதி, மறுமை நாளில் பல இருள்களாகக் காட்சி தரும்.
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 46. அநீதிகளும் அபகரித்தலும்
ஹதீஸ் எண் : 2447.
கேள்வி ✨ 5
அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு அஞ்சுங்கள் என நபி ஸல் அலை கூறினார்கள்.
#அதற்கான_காரணம்_என்ன?
பதில் ✨ 5
#அதற்கும்_அல்லாஹ்வுக்கும்_இடையே_எந்தத்_திரையும்_இல்லை
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிபவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை' என்று நபி(ஸல்) அவர்கள் முஆத்(ரலி) யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்தபோது கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 46. அநீதிகளும் அபகரித்தலும்
ஹதீஸ் எண் : 2448.
கேள்வி ✨ 6
முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு வைத்து, அதிலிருந்து அதன் இலைகள், கனிகள் ஆகியவை பறவைகளாலும் கால் நடைகளாலும் உண்ணப்பட்டால், அதுவும் அவருக்கு #எவ்வாறு_அமையும்?
பதில் ✨ 6
#அதுவும்_அவருக்கு_ஒரு_தர்மமாக_அமையாமல்_இருப்பதில்லை
(#தர்மமாக_அமையும்)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு வைத்து, அதிலிருந்து (அதன் இலைகள், கனிகள் ஆகியவை பறவைகளாலும் கால் நடைகளாலும்) உண்ணப்பட்டால், அதுவும் அவருக்கு ஒரு தர்மமாக அமையாமல் இருப்பதில்லை. அதிலிருந்து களவாடப்பட்டதும் அவருக்கு ஒரு தர்மமாக அமையும்; அதிலிருந்து வன விலங்குகள் உண்பதும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும். அதிலிருந்து பறவைகள் கொத்தித் தின்றதும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும்; அதில் எவரேனும் சேதம் விளைவித்தால் அதுவும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும். - இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 22. தோப்புக் குத்தகை
ஹதீஸ் எண் : 3159.
கேள்வி ✨ 7
#எந்த_வசனம்_அருளப்பெற்ற_சமயம் நபி ஸல் அலை மதுபான வியாபாரத்தை தடை செய்தார்கள்?
பதில் ✨ 7
#அல்பகரா_அத்தியாயத்தின்_இறுதி_வசனங்கள் (#2:275 - #281) #வட்டி_தொடர்பாக_அருளப்பெற்ற_சமயம்
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"அல்பகரா" அத்தியாயத்தின் இறுதி வசனங்கள் (2:275 - 281) வட்டி தொடர்பாக அருளப்பெற்ற சமயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலை நோக்கிப் புறப்பட்டுச் சென்று, (அவற்றை ஓதிக்காட்டி,) மதுபான வியாபாரத்தை(யும்) தடை செய்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 22. தோப்புக் குத்தகை
ஹதீஸ் எண் : 3222.
கேள்வி ✨ 8
#யாருக்கு_கொழுப்பை_அல்லாஹ்_தடை_செய்திருந்தான்?
பதில் ✨ 8
#யூதர்களுக்கு
3224. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
சமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்கள் மதுவை விற்றதாக உமர் (ரலி) அவர்களுக்குத் தகவல் கிடைத்தபோது, "அல்லாஹ் சமுராவைச் சபிப்பானாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "யூதர்களுக்குக் கொழுப்பு தடை செய்யப்பட்டபோது, அவர்கள் அதை உருக்கி விற்றனர். அல்லாஹ் யூதர்களைச் சபிப்பானாக!" என்று கூறியதை அவர் அறியவில்லையா?" என வினவினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 22. தோப்புக் குத்தகை
ஹதீஸ் எண் : 3224.
கேள்வி ✨ 9
வியாபாரத்தில் அதிகமாகச் சத்தியம் செய்ய வேண்டாம் என நபி ஸல் அலை கூறினார்கள்.
#அதற்கான_காரணம்_என்ன?
பதில் ✨ 9
#ஏனெனில்_அது_பொருளை_விலைபோகச்_செய்யும்
#பின்னர்_வளத்தை_அழித்துவிடும்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வியாபாரத்தில் அதிகமாகச் சத்தியம் செய்ய வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், அது (பொருளை) விலைபோகச் செய்யும்; பின்னர் (வளத்தை) அழித்துவிடும்.
இதை அபூகத்தாதா அல்அன்சாரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 22. தோப்புக் குத்தகை
ஹதீஸ் எண் : 3284.
கேள்வி ✨ 10
குர்ஆனில் இறுதியாக அருளப்பெற்ற வசனம் #எதை_பற்றியதாகும்?
பதில் ✨ 10
#கலாலா_குறித்து_அவர்கள்_மார்க்கத்_தீர்ப்புக்_கேட்கின்றனர் (4:176) என்று தொடங்கும் வசனமாகும்
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
குர்ஆனில் இறுதியாக அருளப்பெற்ற வசனம் "(நபியே!) உம்மிடம் ("கலாலா" குறித்து) அவர்கள் மார்க்கத் தீர்ப்புக் கேட்கின்றனர்" (4:176) என்று தொடங்கும் வசனமாகும்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 23. பாகப் பிரிவினைச் சட்டங்கள்
ஹதீஸ் எண் : 3305.
Mohammed nabi sw avargal yanthayantha porgalil nonbu vetargal
ReplyDeleteஇஸ்லாமிய ஆட்சி பற்றிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
ReplyDelete