கேள்வி பதில்


#கேள்வி -0l
இறைவன் நம்மோடு இருக்கிறான் என கூறிய #நபி யார்?

பதில் = முஹம்மது  (ஸல்)

அத் தவ்பா(9:40)

கேள்வி 02ஜின்களுக்கு மறைவான விஷயங்கள் தெரியுமா?

பதில்  = ஜின்களுக்கு மறைவான விஷயங்கள் தெரியாது. அஸ் ஸபா(34:14) மற்றும் அல் ஜின்னு(72:10)

கேள்வி 03குர்ஆனில் மூன்றில் ஒரு பகுதி என சிறப்பித்துக் கூறப்பட்ட சூரா எது?

பதில்  - சூரத்துல் இக்லாஸ் (112 வது அத்தியாயம்)

கேள்வி 04எதிர்கால சந்ததியினருக்கு அத்தாட்சியாக விட்டு வைக்கப்பட்டுள்ளவற்றில் இரண்டைக் கூறுக:

பதில்  = நூஹ் (அலை) அவர்களின் கப்பல் (54:15), மற்றும் பிர்அவ்னின் உடல் (10:92)

கேள்வி 05குர்ஆனில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஒரே ஒரு ஸஹாபியின் பெயர் என்ன?

ஜைத் பின் ஹாரித் (ரலி)  அஹ்ஜாப் (33:37)

கேள்வி 06பிஸ்மில்லாஹ்’ கூறி ஆரம்பம் செய்யப்படாத சூரா எது?

பதில்  = சூரத்துத் தவ்பா

கேள்வி 07ஆயத்துல் குர்ஸி குர்ஆனில் எந்த பாகத்தில், சூராவில் உள்ளது?

மூன்றாவாது பாகத்தின் ஆரம்பத்தில், இரண்டாவது அத்தியாயத்தின் 255 ஆவது வசனம்.

கேள்வி 08வீரமுள்ள செயல் என குர்ஆன் எதைக் கூறுகிறது?

பதில்  = எவரேனும் (பிறர் செய்யும் தீங்கை) பொறுத்துக் கொண்டு மன்னித்து விடடால் அது மிக உறுதியான (வீரமுள்ள) செயலாகும். (42:43), (31:17), (3:186)

கேள்வி:::9⃣👇👇👇

#கோடிட்ட_இடத்தை_நிரப்புக

தீர்ப்பு நாளைப் பொய்யெனக் கருதியவனைப் பார்த்தீரா? அவன் அனாதையை விரட்டுகிறான்._ ____________  ___________ அவன் தூண்டுவதில்லை;;;;;;

பதில்:::👇👇👇

#ஏழைக்கு_உணவளிக்க

தீர்ப்பு நாளைப் பொய்யெனக் கருதியவனைப் பார்த்தீரா? அவன் அனாதையை விரட்டுகிறான். #ஏழைக்கு_உணவளிக்க அவன் தூண்டுவதில்லை.

அல்குர்ஆன் 107:1-3

#கேள்வி l0

முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில் #ஏன் #நோன்பு நோற்க வேண்டும்?

பதில்  = ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதை அல்லாஹ் முஸ்லிம்களுக்கு கடமையாக்கியிருக்கின்றான். “ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்” (அல்-குர்ஆன்  2:183) “உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்” (அல்-குர்ஆன்  2:185) Hits: 4425

Comments

Popular posts from this blog

கேள்வி பதில்

கேள்வி பதில்

கேள்வி பதில்