கேள்வி பதில்
பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்.
1.சொர்க்கம் உங்களின் செருப்பு வாரைவிட உங்களுக்கு மிக அருகில் உள்ளது.
✅அ. சரி.
ஆ. தவறு.
2. இதை நூறு முறை ஓதினால் ஆயிரம் நன்மைகள் எழுதப்படுகின்றன அல்லது அவர் செய்த ஆயிரம் தவறுகள் அவரைவிட்டுத் துடைக்கப்படுகின்றன, அந்த திக்ர் என்ன?
அ. லாஇலாஹ இல்லல்லாஹ்.
✅ஆ. சுப்ஹானல்லாஹ்.
இ. அல்ஹம்துல்லிலாஹ்.
ஈ. அல்லாஹூ அக்பர்.
3. எந்த செயலுக்காக அல்லாஹ் நம் குற்றங்களில் ஒன்றை மன்னித்து , நம் தகுதி ஒன்றை உயர்த்துகிறான்?.
அ. தர்மம்.
ஆ. குர்ஆன் திலாவத்.
✅இ. ஸஜ்தா.
4.இந்த துஆ எப்போது ஓத வேண்டும்?
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ
அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா ப(இ)ஃத மா அமா(த்)தனா வ இலைஹின் னுஷுர்
✅#விழித்தவுடன்
5 இந்த துஆ எப்போது ஓத வேண்டும்?
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْخُبُثِ وَالْخَبَائِثِ
அல்லாஹும்ம இன்னீ அவூது பி(இ)(க்)க மினல் குபு(இ)ஸி வல் கபா(இ)யிஸி.
✅#மலம்_சலம்_கழிக்க_செல்லுமுன்
6 இந்த துஆ எப்போது ஓத வேண்டும்?
بِسْمِ اللَّهِ فِي أَوَّلِهِ وَآخِرِهِ
பிஸ்மில்லாஹி பீ(எ) அவ்வலிஹி வ ஆகிரிஹி எனக் கூற வேண்டும்.
✅உண்ணும்போது#பிஸ்மி_சொல்ல_மறந்துவிட்டால்•
7. கியாமத் நாளில் அலலாஹ்வின் அர்ஷை எத்தனை வானவர்கள் சுமந்து வருவார்கள்?
அ. ஆறு.
ஆ. ஏழு.
✅இ. எட்டு.
ஈ. ஒன்பது.
8. தனிமையில் வாழ்வீர்கள் ,தனிமையில் மரணிப்பீர்கள்,தனிமையில் எழுப்பப்படுவீர்கள் என்று நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் யாரை பார்த்து சொன்னார்கள்?
அ. அபு சூஃபியான்.
✅ஆ. அபுதர் அல் ஃகிஃபாரி
இ. அம்மார் பின் யாசர்.
9. இறைநம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர்
(துணை நிற்கும் விஷயத்தில்) எதைப் போன்றவர்கள் ஆவர் என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள்?📖
✅#கட்டிடத்தைப் போன்றவர்கள்.
10 ஸூரத்துல் நஹ்லில், அல்லாஹ் மனிதர்களுக்கு எதனை ஏவுகிறான்?
✅a. நீதி செலுத்துமாறு
b. நன்மை செய்யுமாறு
c. உறவினர்களுக்கு கொடுப்பது
d. அனைத்தும்
Comments
Post a Comment