கேள்வி பதில்
1️⃣ஒளியாலான மேடையில் இருப்பவர்கள் யார்❓❓
பதில் 1️⃣
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
#நேர்மையான ஆட்சியாளர்கள், வல்லமையும் மாண்பும் மிக்க அளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் வலப்பக்கத்தில் ஒளியாலான மேடைகளில் இருப்பார்கள்.
⭕முஸ்லிம் (3731)⭕
2️⃣கண் நோய்க்கு நிவாரணமாவது எது❓❓
விடை:2️⃣#சமையல் காளான்...
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
சமையல் காளான் 'மன்னு' வகையைச் சேர்ந்தது ஆகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும்.
⭕(புகாரி:5708)⭕
3️⃣எனது (பிரத்தியேக) உதவியாளர் என்று நபிகளார் யாரைக் குறிப்பிட்டார்கள்❓❓
விடை 3️⃣#ஸுபைர் பின் அவ்வாம் (ரலி)
இறைத்தூதருக்கும் (பிரத்தியேகமான) உதவியாளர் ஒருவர் உண்டு; என்னுடைய (பிரத்தியேக) உதவியாளர் ஸுபைராவார்' என்று கூறினார்கள்.
⭕(புகாரி 2997)⭕
கேள்வி 4️⃣
4)“அலிப் லாம் மீம்” என்ற வார்த்தையால் துவங்கும் அத்தியாயங்கள் மொத்தம் எத்தனை❓அவை யாவை❓❓
#பதில்4️⃣
#ஆறு
1. அல்பகரா
2. ஆல இம்ரான்
3. அல் அன்கபூத்
4. அர்ரூம்
5. லுக்மான்
6. அஸ்ஸஜ்த(ஹ்)
கேள்வி 5️⃣
பெற்றவர்கள் தவிர மற்றவர் தாயாக முடியாது என்று கூறப்படும் வசனம் எது❓❓
அ)69:2
ஆ)58:2
இ)87:6
பதில் 5️⃣#ஆ)58:2
“உங்களில் சிலர் தம் மனைவியரைத் “தாய்கள்” எனக் கூறிவிடுகின்றனர்; அதனால் அவர்கள் இவர்களுடைடைய தாய்கள்” (ஆகிவிடுவது) இல்லை; இவர்களைப் பெற்றெடுத்தவர்கள் தாம் இவர்களுடைய தாய்கள் ஆவார்கள் - எனினும், நிச்சயமாக இவர்கள் சொல்லில் வெறுக்கத்தக்கதையும், பொய்யானதையுமே கூறுகிறார்கள் - ஆனால் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் பொறுப்பவன்; மிகவும் மன்னிப்பவன்.
⭕(அல்குர்ஆன் : 58:2)⭕
கேள்வி 6️⃣
யார் உறவை பேணுபவர் அல்லர்❓*
விடை6️⃣ பதிலுக்கு பதில் உறவாடுபவர்.....
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
#பதிலுக்கு பதில் உறவாடுகிறவர் (உண்மையில்) உறவைப் பேணுகிறவர் அல்லர்; மாறாக உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைகிறவரே உறவைப் பேணுபவராவார்.19
என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
⭕ஸஹீஹ் புகாரி : 5991⭕
கேள்வி 7️⃣
அல்லாஹ் குர்ஆனில் மூச்சித்திணற ஓடுபவற்றின் மீது சத்தியம் செய்கிறான் #எது மூச்சித்திணற ஓடுவது என்பது எதை குறிக்கும்❓❓
அ)குதிரை
ஆ)சிறுத்தை
இ)அல்லாஹ் அறிந்தவன்.
பதில் 7️⃣
#குதிரை
மூச்சுத் திணர அதிவேகமாகச் செல்லும் குதிரைகள் மீது சத்தியமாக!
⭕(அல்குர்ஆன் : 100:1)⭕
கேள்வி 8️⃣
நபி(ஸல்) அவர்கள் மிஃராஜ் பயணத்தின்போது புராக் வாகனத்தில் ஏறுவதை எந்த இரு நபித்தோழர்கள் பாதி தூக்கத்தில் கண்டனர்❓❓
விடை8️⃣
#ஹம்ஜா(ரலி) மற்றும் ஜாஃபர் (ரலி)
⭕(புகாரி 3207)⭕
கேள்வி 9️⃣
குர்ஆனில் உயிரினங்களின் பெயரில் எத்தனை சூறாக்கள் உள்ளன.?
அ.5
ஆ.6
இ.7
பதில் 9️⃣ ஆ)ஆறு
1. அல் பகரா - அந்த மாடு 🐂 (அத்தியாயம் 2)
2. அல் அன்ஆம் - கால்நடைகள் : ஆடு , மாடு, ஒட்டகம் 🐐🐂🐪 (அத்தியாயம் 6)
3. அந்நஹ்ல் - தேனீ 🐝 (அத்தியாயம் 16)
4. அந்நம்ல் - எறும்பு 🐜 (அத்தியாயம் 27)
5. அல் அன்கபூத் - சிலந்தி 🕷 (அத்தியாயம் 29)
6. அல் ஃபீல் - யானை 🐘 (அத்தியாயம் 105)
கேள்வி 🔟
1000 நன்மைகளை பெற்றுத் தரும் திக்ர் எது❓❓
#பதில்🔟
ஒரு நாளைக்கு 100 முறை சுப்ஹானல்லாஹ் என்று கூறினால்
1000 நன்மைகள் எழுதப்படும்
அல்லது 1000 பாவங்கள் மன்னிக்ப் படும்..
ஹதீஸ் சுருக்கம்
⭕முஸ்லிம்- 5230⭕
الحمد لله
ReplyDeleteநபி ஸல் அவர்கள் இறுதியாக ஓதிய துஆ என்ன?
ReplyDelete