கேள்வி பதில்

...
#கேள்வி 01

ரமலான் மாத நோன்பின் நோக்கம்

அ : அல்லாவுக்காக வெறுமனே பசித்து தாகித்து இருத்தல்

ஆ: ஏழையின் பசி உணரல்

இ : இறையச்சமுடையோராக ஆகல்

#பதில் 01

✅இறையச்சம்
☘☘☘☘☘☘

183, 184. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (#இறைவனை) #அஞ்சுவதற்காக உங்களுக்கு முன்சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு #கடமையாக்கப்பட்டுள்ளது.

உங்களில் நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அதற்குச் சக்தியுள்ளவர்கள் ஓர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரமாகும். நன்மைகளை மேலதிகமாகச் செய்வோருக்கு அது நல்லது. நீங்கள் அறிந்தால் நோன்பு நோற்பதே சிறந்தது.

திருக்குர்ஆன்  2:184

#கேள்வி 02

#ரமழான் மாதத்தில் பகல் நேரங்களிலோ இரவு நேரங்களிலோ சினிமா நாடகம் என்று பொழுதை கழிக்கின்றனர்

இவர்களின் நோன்பால் பயன் உண்டா ?

பதில் 02

கண்மணி நாயகம் சல்லலாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

யார் பொய்யான பேச்சையும், பொய்யான (பாவமான) நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் தமது உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!

அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)

புகாரி 1903

கேள்வி 03

#சிலர் நோன்புக் காலங்களிலும் தூசனத்தை (கெட்ட வார்த்தை) பேசி விட்டு நோன்பு சூடூ என்கின்றனர்

பல இளைஞர்கள் விளையாட்டு கோளிக்கைகளில் ஈடுப்பட்டு ரமலான் காலத்தை கழிக்கின்றனர்

இவர்களின் நோன்பு #ஏற்றமானதா ??

#பதில் 03

✅ இல்லை
☘☘☘☘☘☘

கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயம் ஆகும் எனவே நோன்பாளி

#கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்!

# அறிவீனமான(வீணான) செயல்களில் ஈடுபடவேண்டாம், யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் நான் நோன்பாளி! என்று இரு முறை கூறட்டும்! என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையைவிடச் சிறந்ததாகும்! (மேலும்) எனக்காக நோன்பாளி தமது உணவையும் பானத்தையும் இச்சையையும் விட்டுவிடுகிறார்! நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது அதற்கு நானே கூலி கொடுப்பேன்! ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும்! (என்று அல்லாஹ் கூறுகிறான்)

அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)

புகாரி 1894

#கேள்வி 04

பகல் முழுவதும் தூங்கி பலர் நோன்பு நேரத்தை கழிக்கின்றனர்

இந்த நோன்பு

(i) நம்மை இறையச்சமுள்ளவராக #மாற்றுமா??

மாறாக ரமலான்
(ii) பகல், இரவு காலங்களில் என்ன செய்ய வேண்டும்?

பதில் 04
✅ (i) இல்லை
(ii) இறைவணக்க வழிபாடுகள் திக்ர் திலாவத் குர்ஆன் ஓதல் , தர்மம் செய்தல் மற்றும் எல்லா நன்மையான காரியத்திலும் ஈடுபடல்

☘☘☘🌺🌺🌺
ஹதிஸ்

..
கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

எத்தனையோ நோன்பாளிகள் அவர்களது நோன்பின் மூலமாக அவர்கள் பெற்றுக் கொண்டது பசியையும், தாகத்தையும் தவிர வேறெதுவுமில்லை.

அஹ்மத், இப்னுமாஜா

கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

நம்பிக்கை கொண்டு (#நற்கூலியை எதிர்பார்த்து) ரமழான் மாதத்தில் நின்று வணங்குகிறவரின் முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும்.

அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)

புகாரி 37

கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

நோன்பாளி ஒருவர் அதிகமதிகம் குர்ஆன் ஓதுவதிலும் துஆ, திக்ர்களிலும் ஸதகா கொடுப்பதிலும் ஈடுபடுவதோடு, தீயவற்றைப் பேசுவதிலிருந்து நாவைப் பாதுகாத்துக் கொள்வதும் இன்றியமையாததாகும்.

அப்துல்லாஹ் இப்னு அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு)

திர்மிதி

#கேள்வி 05

#ரமலான் மாதத்தில் நபி (ஸல் ) அவர்களின் தர்மம்

அ : வருகிற ஏழைகளுக்கு ஒரு பிடி அரிசியோ சில்லரை காசுகளோ கொடுக்கப்பட்டது(நம்மை போல)

ஆ : நோன்பு கஞ்சை வீணாக்காது கொடுக்கப்பட்டது(நம்மை போல)

இ நல்லதை வாரி வாரி வளங்கும் வள்ளலாக திகழ்ந்தார்கள்

பதில் 05

☘☘☘☘☘☘
#ஹதிஸ்

1902. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள். ஜிப்ரீல்(அலை) ரமலான் மாதத்தில் நபி(ஸல்) அவர்களைச் சந்திக்கும் வேளையில் நபி(ஸல்) அதிகமதிகம் வாரி வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல்(அலை) ரமலானின் ஒவ்வொரு இரவும் - ரமலான் முடியும்வரை - நபி(ஸல்) அவர்களைச் சந்திப்பார். நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீலிடம் குர்ஆனை ஓதிக் காட்டுவார்கள். ஜிப்ரீல்(அலை) தம்மைச் சந்திக்கும்போது மழைக்காற்றை விட அதிகமாக நபி(ஸல்) அவர்கள் வாரி வழங்குவார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 30. நோன்பு

கேள்வி 06

#சவூதியில் நோன்பு என்று அறிவித்தால் நோன்பு நோற்க வேண்டுமா ??

பிறைக் கண்டு நோன்பு நோற்க வேண்டுமா ??

பதில் 06

✅ பிறைக்கண்டால்

☘☘☘☘☘☘ஹதிஸ்

1909.  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'பிறையைப் பாத்து நோன்பு வையுங்கள்; பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாள்களாக முழுமைப் படுத்துங்கள்.'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 30. நோன்பு
#கேள்வி 07

ரமலான் மாத நோன்போடு
மறதியாக ஒருவர் உணவை உண்டால் நோன்பு

1 முறிந்து விட்டது

2 நோன்பை தொடரலாம் முறியவில்லை

பதில் 07

✅ 2 நோன்பை தொடரல்

☘☘☘☘☘☘
ஹதிஸ்

1933. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'ஒருவர் மறதியாக உண்ணவோ பருகவோ செய்தால் அவர் தம் நோன்பை முழுமைப்படுத்தட்டும்; ஏனெனில் அவரை அல்லாஹ்வே உண்ணவும் பருகவும் வைத்தான்.'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 30. நோன்பு

#கேள்வி 08

கடும் வெப்ப காலத்தில் பலஹீனமான ஒருவர் நோன்பை வைத்துக் கொண்டு பயணம் செய்தல்

அ: நற்செயலில் சேராது.

ஆ : நற்செயல்

பதில் 08

✅ நற்செயலில் சேராது (மார்க்கம் கடுமையானது அல்ல)

1945. அபூ தர்தா(ரலி) அறிவித்தார்.
'நாங்கள் நபி(ஸல்) அவர்களின் பயணமொன்றில் வெயில் மிகுந்த ஒரு நாளில் அவர்களுடன் சென்றோம். கடும் வெப்பத்தின் காரணமாக சிலர் தம் கையைத் தம் தலையில் வைத்தனர். அப்பயணத்தில் நபி(ஸல்) அவர்களையும் இப்னு ரவாஹா(ரலி)அவர்களையும் தவிர எங்களில் வேறு எவரும் நோன்பு நோற்றிருக்கவில்லை!'
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 30. நோன்பு

1946. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தபோது, ஒருவர் நிழலில் தங்க வைக்கப்பட்டு மக்கள் (அவரைச் சுற்றிலும்) குழுமியிருந்ததைக் கண்டார்கள். 'இவருக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டார்கள். 'இவர் நோன்பு நோற்றிருக்கிறார்!' என்று மக்கள் கூறினார்கள். அப்போது #நபி(ஸல்) அவர்கள் '(#பலவீனமான நிலையில் உள்ளவர்கள்) #பயணத்தில் #நோன்பு நோற்பது நற்செயலில் சேராது!' என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 30. நோன்பு

#கேள்வி 09

ரமலான் மாதத்தில்
பயணிகளுக்கு மார்க்கம் சலுகை வழங்கியுள்ளது

ஒரு பிரயாணி நோன்பு நோற்று மற்ற பிரயாணியை குறை கூறலாம??

பதில் 09

✅ கூடாது

☘☘☘☘☘☘
ஹதிஸ்

1947. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் பயணத்தில் செல்வோம். நோன்பு நோற்றவரை நோற்காதவரும் நேற்காதவரை நோற்றவரும் குறை கூறமாட்டார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 30. நோன்பு

#அல்குர்ஆன்
🌺🌺🌺🌺🌺🌺🌺

உங்களில் நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அதற்குச் சக்தியுள்ளவர்கள் ஓர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரமாகும். நன்மைகளை மேலதிகமாகச் செய்வோருக்கு அது நல்லது. நீங்கள் அறிந்தால் நோன்பு நோற்பதே சிறந்தது.

திருக்குர்ஆன்  2:184

கேள்வி 10

ரமலானில் நல்லெண்ணத்துடனும் , நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு வைத்தால்

அ : முன்னைய பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்படும்

ஆ : ஷஹ்பான் மாத கால பாவம் மன்னிக்கப்படும்

இ : ஒரு வருட பாவம் மன்னிக்கப்படும்

பதில் 10
☘☘☘☘☘
ஹதிஸ்

1901.  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறவரின் முன் பாவம் மன்னிக்கப்படுகிறது. ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 30. நோன்பு

Comments

  1. எந்த வருடத்தில் ரம்ஜான் கடமையானது?

    ReplyDelete
  2. நோன்பின் போது எச்சில் விலுங்களாமா

    ReplyDelete
  3. Oruvar saudi yil nonbu aarambithu India vil nonbu thodar kiraar. India vil 29 vathu nonbu avaruku 30 aahirathu. Apadiyendraal India vil varum 30 vathu nonbai avar vaikalaama, kudatha??

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கேள்வி பதில்

கேள்வி பதில்

கேள்வி பதில்