கேள்வி பதில்

கேள்வி : 1

அல்லாஹ் !
ஜக்கரியா (அலை ) அவர்களை எத்தனை இரவுகள் பேசாமல் ஆக்கினான் ?

அ ) இரண்டு

ஆ ) பத்து

இ ) மூன்று

ஈ ) ஆறு

பதில் : 1

இ ) மூன்று

قَالَ رَبِّ اجْعَلْ لِّىْۤ اٰيَةً‌   قَالَ اٰيَتُكَ اَلَّا تُكَلِّمَ النَّاسَ ثَلٰثَ لَيَالٍ سَوِيًّا‏
(அதற்கவர்) “என் இறைவனே! நீ எனக்கு ஓர் அத்தாட்சியை (இதற்காக) ஏற்படுத்துவாயாக!” என்று வேண்டினார்; “நீர் சவுக்கியத்துடன் இருக்கும் நிலையிலேயே மூன்று இரவு(பகல்)கள் நீர் மக்களுடன் பேச முடியாமலிருப்பீர்; (அதுவே) உமக்கு அத்தாட்சியாகும்” என்று கூறினான்.
(அல்குர்ஆன் : 19:10)

2. கேள்வி :

இம்மையிலும் மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள் யார்?

2. பதில் :

எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்.

அல்குர்ஆன் : 24:23

اِنَّ الَّذِيْنَ يُؤْذُوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ لَعَنَهُمُ اللّٰهُ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ وَاَعَدَّ لَهُمْ عَذَابًا مُّهِيْنًا‏

எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நோவினை செய்கிறார்களோ, அவர்களை நிச்சயமாக அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் சபிக்கின்றான்; மேலும், அவர்களுக்கு இழிவுதரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றான்.

அல்குர்ஆன் : 33:57

3. கேள்வி :

பசி மற்றும் பயம் எனும் ஆடையை அல்லாஹ் யாருக்கு அணிவித்தான்?

3. பதில் : 

அல்லாஹ் ஓர் ஊரை (அவர்களுக்கு) உதாரணங் கூறுகிறான்; அது அச்சமில்லாதும், நிம்மதியுடனும் இருந்தது, அதன் உணவு(ம் மற்றும் வாழ்க்கை)ப் பொருட்கள் யாவும் ஒவ்வோரிடத்திலிருந்தும் ஏராளமாக வந்து கொண்டிருந்தன - ஆனால் (அவ்வூர்) அல்லாஹ்வின் அருட் கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல் மாறு செய்தது; ஆகவே, அவ்வூரார் செய்து கொண்டிருந்த (தீச்) செயல்களின் காரணமாக, அல்லாஹ் பசியையும் பயத்தையும் அவர்களுக்கு ஆடையாக (அணிவித்து அவற்றை) அனுபவிக்குமாறு செய்தான்.

அல்குர்ஆன் : 16:112

4. கேள்வி :

நபி  (ஸல்) அவர்களுக்கு இறுதியாக அருளப்பெற்ற இறைவசனம் எது?

4. பதில் :

குர்ஆனில் இறுதியாக அருளப்பெற்ற வசனம் ”(நபியே!) உம்மிடம் (”கலாலா” குறித்து) அவர்கள் மார்க்கத் தீர்ப்புக் கேட்கின்றனர்” (4:176) என்று தொடங்கும் வசனமாகும்.

ஸஹீஹூல் முஸ்லிம் 3305, 3306, 3307, 3308

5. கேள்வி :

அரஃபா நாளில் இறக்கப்பட்ட சிறப்புமிக்க இறைவசனம் எது?

5. பதில் :

“இன்று உங்களின் மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கி விட்டேன்“ எனும் (திருக்குர்ஆன் 05:3 வது) வசனம்

புகாரி : 4606

முஸ்லிம் : 5740, 5741, 5742

6. கேள்வி :

எந்த வகையான நாய்களை கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தர விட்டார்கள்?

6. பதில் :

கண்களுக்கு மேலே இரு வெண் புள்ளிகள் உள்ள கன்னங்கரிய நாய்களை

ஸஹீஹூல் முஸ்லிம் 3199

7. கேள்வி :

நபி (ஸல்) அவர்கள் கொடுத்த பெரிய வலீமா விருந்து எது?

7. பதில் :

நபி(ஸல்) அவர்கள் ஸைனப்(ரலி) அவர்களை மணந்துகொண்டபோது அளித்த (வலீமா) மணவிருந்ததைப் போன்று தம் மனைவியரில் வேறெவரை மணந்தபோதும் அளிக்கவில்லை; ஸைனப்(ரலி) அவர்களை மணந்தபோது நபி(ஸல்) அவர்கள் ஓர் ஆட்டை (அறுத்து) மணவிருந்தளித்தார்கள்.

புகாரி 1563, 5168, 5171, 7421

8. கேள்வி :

கஅபாவை வலம் வந்து இரண்டு ரக்அத்கள் தொழுதால் கிடைக்கும் நன்மை என்ன?

8. பதில் :

ஓர் அடிமையை உரிமை விட்ட நன்மை கிடைக்கும்

இப்னுமாஜா 2947

9. கேள்வி :

தனித்துவிட்டவர்கள்  என நபி (ஸல்) எவர்களை கூறினார்கள்?

9. பதில் :

அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூரும் ஆண்களும் நினைவுகூரும் பெண்களும் 

முஸ்லிம் 5197

10. கேள்வி :

மஸ்ஜிதுந் நபவியில் தொழுவதின் சிறப்பு என்ன?

10. பதில் : 

(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் தொழுவதானது, மற்றப் பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும்; (மக்காவிலுள்ள) ”மஸ்ஜிதுல் ஹராம்” பள்ளிவாசலைத் தவிர!

முஸ்லிம் : 2693, 2694

Comments

Popular posts from this blog

கேள்வி பதில்

கேள்வி பதில்

கேள்வி பதில்