கேள்வி பதில்
கேள்வி ::1
சகுனம் பார்ப்பது என்பது எதனை சேரும் or என்ன??
பதில் ::1
சகுனம் பார்ப்பது இணைவைப்பாகும், சகுனம் பார்ப்பது இணைவைப்பாகும்’ என நபியவர்கள் கூறியதாக இப்னு மஸ்ஊத் (ரழி) கூறுகிறார்கள். (ஆதாரம்: திர்மிதி)
கேள்வி ::2
சகுனம் பார்க்காதவர்களுக்கு மறுமையில் என்ன கிடைக்கும் அத்தாவது சிறப்பு என்ன??
பதில் ::2
சகுனத்தை வெறுத்து ஒதுங்குவதனால் அது அவனை சுவனத்திற்கு இட்டுச் செல்லும் என்பது நபி மொழிகளில் இருந்து தெரிய வருகின்றது.
நாளை #மறுமையில் எந்த விதக் கேள்வி கணக்கோ, தண்டனையோ #இன்றி சுவர்க்கம் #நுழைபவர்கள் #எழுபதுனாயிரம் பேர்களாவர். ‘அவர்கள் #யாரென்றால், #மந்திரிக்காதவர்கள், #மந்திரிக்குமாறு யாரையும் #பனிக்காதவர்கள், #சகுனம் பார்க்காதவர்கள் மற்றும் அல்லாஹ்வையே (எப்போதும்) சார்ந்திருப்பவர்கள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
கேள்வி ::3
#சகுனமாகக் கருதக் கூடிய #ஒன்றைப் பார்க்க நேர்ந்தால் அல்லது கண்டால் என்ன கூற வேண்டும்?
(اللهم لا طير إلا طيرك ولا خير إلا خيرك ولا إله غيرك)
(اللهم لايأتي بالحسنات إلا أنت ولا يذهب بالسيئات إلا انت ولا حول ولا قوة إلا بك)
பொருள்: ‘இறைவா! உனது சகுனத்தைத் தவிர வேறு சகுனம் கிடையாது. உன நலவைத் தவிர வேறு நலவு கிடையாது. உன்னைத் தவிர வேறு நாயனில்லை’. (ஆதாரம்: அஹ்மத்).
மேலும் ‘இறைவா! உன்னைத் தவிர நன்மைகளைத் தருபவன் வேறுயாருமில்லை. தீமைகளைப் போக்குபவனும் உன்னைத் தவிர வேறு யாரும் கிடையாது. உன்னைத் தவிர வேறு எந்த சக்திகளும் எம்மைச் சூழ இல்லை’ என்று கூறுமாறு நபியவர்கள் எம்மைப் பணித்துள்ளார்கள்.
கேள்வி : 4
சகுனம் பார்ப்பது உண்டா???
ஸஹீஹுல் புகாரி ஹதீஸ் 5093 ஐக் கண்டேன். சகுனமும் இருப்பது போல் வருகிறது. அதாவது....அபசகுனம் என்பது (எதிலாவது இருக்க முடியும் என்றால்) பெண், வீடு, குதிரை ஆகிய மூன்று விஷயங்களில் தான் (இருக்க முடியும்). இதன் அர்த்தம் or கருத்து என்ன???
பதில் ::4
அப்படி என்றால்...புது பெண் வரவால், புது வீடு வாங்கினால், குதிரை (மற்றும் கால்நடை) வாங்கினால் அபசகுனமும் வர வாய்ப்பு உள்ளதா? அவை சரிஇல்லை என்றால் பல கஸ்டங்களும் சோதனைகளும் சுகவீனமும் வருமா? கெட்டதும் நடக்குமா? யாரும் இறந்து போக வாய்ப்பும் உள்ளதா? அவைகள் நலமுடன் இருந்தால் எல்லாம் நலமுடன் அமையுமா? எல்லாம் நலமுடன் இருக்க என்ன செய்ய வேண்டும். விரிவான விளக்கம் தாருங்கள். (ஹமீது ஹுஸைன் யாஹுமெயில் மூலமாக)
சகுனம் தொடர்பாக வல்ல அல்லாஹ் தனது திருமறையில் தெளிவாக இவ்விஷயத்தை விட்டும் தவிர்ந்து கொள்ளும்படி எச்சரிக்கிறான்.
சூரத்துல் மாயிதா 90 ஆவது வசனத்தில், 'மது, சூது இவற்றுடன் அம்பு எறிந்து குறி (சகுனம்) பார்த்தலையும் ஷைத்தானின் வேலை என்று குறிப்பிட்டு, விசுவாசிகள் இவற்றிலிருந்து தவிர்ந்து தவிர்ந்து நடந்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்துகிறான்.
மேலும் ரஸுல் (ஸல்) அவர்கள் சகுனம் பார்ப்பதில் வேறொரு வகையான பறவை சகுனத்தை தடை செய்துள்ளார்கள். பறவை சகுனம் என்பது குறிப்பிட்ட ஒரு பறவையை காணும் பொழுதோ அதன் சப்தத்தை கேட்பதைக் கொண்டோ அது பறக்கும் திசையை வைத்தோ ஒரு காரியம் நல்லவிதமாக அல்லது தீங்காக அமையும் என தீர்மானிப்பது.
#சகுனம் பார்ப்பது இணைவைப்பதாகும். நமக்கு ஏற்படும் எந்தத் துன்பமாயினும் அதை இறைவன் தவக்குல் (எனும் உறுதியான நம்பிக்கை) மூலம் நீக்குவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்: திர்மிதி 1663)
தவிர மேலும் ஒரு ஹதீஸில் 'தொற்று நோயோ, சகுனமோ கிடையாது' (திர்மிதி 1664)என்றும் கூறியுள்ளார்கள். எனவே இவற்றிலிருந்து சகுனம் பார்ப்பது தடுக்கப்பட்டுள்ளது என்பதனை தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
இனி தாங்கள் சுட்டிக்காட்டிய புஹாரி ஹதீஸ் எண் 5093 யிலும் கூட குறிப்பிட்ட மூன்று விஷயங்களில் அபசகுனம் (ஒருவேளை) நேரிடலாம் என்ற செய்தி தான் இருக்கிறதே அல்லாமல் இதன் மூலம் சகுனம் பார்ப்பதை நியாயப்படுத்த முடியாது.
ஆனால் இங்கே சுட்டிக்காட்டப்பட்டுள்ள புஹாரி ஹதீஸ் எண் 5093 இல் அபசகுனம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது மேற்குறிப்பிடப்பட்டுள்ள அர்த்தத்தில் அல்ல. மாறாக இம்மூன்று விஷயங்களும் (வேறொரு அறிவிப்பின்படி நான்கு விஷயங்களும்) அல்லாஹ்வின் நாட்டப்படி மோசமான முடிவுகளை சிரமங்களை தரக்கூடியதாக அமையலாம் என்ற கருத்தில் தான் '#அபசகுனமாக' என குறிப்பிடப்பட்டுள்ளது என்பதனை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
#இவற்றிலிருந்து பாதுகாவல் பெற நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ள முறை சரியான தீர்வாக அமையும்.
கேள்வி :::5
புஹாரி ஹதீஸ் எண் 5093 யிலும் கூட குறிப்பிட்ட மூன்று விஷயங்களில் அபசகுனம் (ஒருவேளை) நேரிடலாம் என்று நினைத்தால்... இதில் இருந்து #பாதுகாப்பு பெற என்ன கூறவேண்டும்???
பதில் ::5
#இவற்றிலிருந்து பாதுகாவல் பெற நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ள முறை சரியான தீர்வாக அமையும்.
#நபி (ஸல்) அவர்கள், 'உங்களில் யாரேனும் மணம் புரிந்தாலும், அல்லது ஒரு பணியாளை வேலைக்கமர்த்தினால் (வேறொரு அறிவிப்பில் #கழுதையை வாங்கினால் அதன் கழுத்தைப் பிடித்துக் கொண்டு என்றும் மேலதிகமாக வந்துள்ளது) இத்துஆவை ஓதிக் கொள்ளுங்கள்' என கற்றுத் தந்துள்ளார்கள்.
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க கைரஹா வகைர மா ஜிபில்தஹா அலைஹ், வஅவூதுபிக மின் ஷர்ரிஹா வஷர்ரி மா ஜிபில்தஹா அலைஹ்.
பொருள்: எங்களின் இறைவா! நிச்சயமாக நான் உன்னிடத்தில் இதிலுள்ள நன்மையையும் இயல்பாக இது எந்த நன்மையில் ஆக்கப்பட்டுள்ளதோ அதனையும் தரும்படி கோருகிறேன். மேலும் இதிலுள்ள தீமையையும் இயல்பாக இது எந்த தீங்கில் அமையப் பெற்றுள்ளதோ அதனையும் விட்டு உன்னிடத்தில் பாதுகாவல் தேடுகிறேன். (நூல்கள்: நஸயீ, இப்னுமாஜா, ஹாக்கிம்)
எனவே இந்நான்கு விஷயங்களிலும் இத்துஆவை ஓதிக் கொள்வது நமக்கு நன்மை பயக்கும்.இன்ஷா அல்லாஹ்
மேலும் எந்த செயலை செய்ய நாடும் பொழுதும் அவற்றில் நலவை நாடி பிரார்த்தனை (இஸ்திகாரா) செய்யும் படியும் நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். எனவே இஸ்திகாரா மூலமும் நாம் நன்மையை அடையலாம். வல்ல அல்லாஹ் மிக அறிந்தவன்
கேள்வி ::6
இஸ்திகாரா தொழுகையைப் பற்றி வரக்கூடிய நபிமொழியும் பிரார்த்தனையும்
பதில் ::6
அல்லாஹூம்ம இன்னீ அஸ்தகீருக பி இல்மிக, வ அஸ்தக்திருக பீகுதுரதிக, வஅஸ் அலுக மின் பழுலிகல் அழீம், பஇன்னக தக்திர் வலா அக்திர், வதஃலம் வலா அஃலம், வ அன்த அல்லாமுல் குயூப், அல்லாஹூம்ம இன் குன்த தஃலம் அன்ன ஹாதல் அம்ர – (தேவையைக் குறிப்பிட வேண்டும்) -கைருன் லீ பீ தீனீ வமஆஷீ வஆகிபது அம்ரீ பக்துர்கு லீ வயஸ்ஸிர்கு லீ சும்ம பாரிக்லீபீ, வ இன்குன்த தஃலம் அன்ன ஹாதல் அம்ர ஷர்ருன் லீ பீதீனீ வமாஆஷீ வ ஆகிபது அமரீ பஸ்ரிப்கு அன்னீ வஸ்ரிப்னீ அன்கூ வக்துர்லியல் கைர ஹைசு கான சும்ம அர்லினீ பீஹ்”
இதன் பொருள்:
“யா அல்லாஹ்! நான் உன்னிடம் உனது ஞானத்தைக் கொண்டு நன்மையை யாசிக்கின்றேன்; மேலும் உனது ஆற்றலைக் கொண்டு ஆற்றலை யாசிக்கிறேன்; மேலும் உன்னிடமிருந்து உனது மகத்தான அருளை யாசிக்கிறேன்; ஏனெனில் நீ ஆற்றல் பெற்றவன்; என்னிடம் எந்த ஆற்றலும் இல்லை. மேலும் நீ நன்கு அறிபவன். நான் எதனையும் அறியமாட்டேன். மேலும் நீயே மறைவானவை அனைத்தும் அறிந்தவன்! யாஅல்லாஹ்! இந்த விஷயம் (விஷயத்தைக் குறிப்பிட வேண்டும்) எனக்கும், எனது தீனுக்கும், எனது வாழ்கைக்கும், எனது விவகாரத்தின் முடிவுக்கும்-இவ்வாறும் சேர்த்துக் கொள்ளலாம். எனது உடனடியான, தாமதமான விவகாராத்திற்கும் – நன்மையானது என நீ அறிந்தால் இதனை எனது விதியில் சேர்ப்பாயாக! மேலும் இதனை எனக்கு எளிமையாக்கித் தருவாயாக! பிறகு இதில் எனக்கு பாக்கியம் அருள்வாயாக! ஆனால் இந்தப் பணி எனக்கு, எனது தீனுக்கும் எனது வாழ்கைக்கும் எனது விவகாரத்திம் முடிவுக்கும் – இவ்வாறு சேர்த்துக் கொள்ளலாம். எனது உடனடியான், தாமதமான விவகாரத்துக்கும்) தீமையானது என நீ அறிந்தால் இதனை என்னை விட்டு அகற்றி விடுவாயாக! மேலும் எனது விதியில் நன்மையை சேர்ப்பாயாக! அது எங்கிருந்தாலும் சரியே! பிறகு அதில் எனக்கு திருப்தி ஏற்படுத்தித் தருவாயாக!” (ஆதாரம் புகாரி)
கேள்வி ::7
#இஸ்திகாரா தொழுகையை தொழும் நேரம் இருக்கா??
பதில் :7
இஸ்திகாரா தொழுகைக்கு என்று குறிப்பிட்ட நேரங்கள் கிடையாது. எனினும் தொழுவதற்கு தடுக்கப்பட்ட நேரங்களை தவிர்ந்து கொள்வது நல்லதே! பஜுர் தொழுகையிலிருந்து சூரியன் ஒரு ஈட்டி உயரும் வரை உள்ள நேரம், மற்றும் அஸருடைய நேரம் முடிந்ததிலிருந்து சூரியன் மரையும் வரை உள்ள நேரங்களையும் குறிப்பிடலாம். இவ்வாறான நேரங்களில் நபிலான தொழுகைகள் தடுக்கப்பட்டுள்ளன. ஏதாவதொரு காரணத்துக்காக தொழும் தொழுகையை தொழலாம். உதாரணமாக பள்ளியுடைய கானிக்கை தொழுகை (தஹீயதுல் மஸ்ஜித்) மேலும் பிரார்த்தனைகள் ஏற்று கொள்ளப்படும் நேரங்களில் தொழுவது வரவேற்கத்தக்க விஷயமாகும். உதாரணமாக இரவின் கடைசி பகுதி, பாங்குக்கும் இகாமத்துக்கும் இடைப்பட்ட நேரம், இஸ்திகாரா தொழுகை தொழ தடுக்கப்பட்ட நேரத்தை விட்டும் பிந்திவிடுமானால் அந்நேரத்தில் தொழலாம்.
கேள்வி ::8
இஸ்திகாரா தொழுகையை (யின்) தவறான நம்பிக்கை என்ன??
பதில் :::8
இஸ்திகாரா தொழுகையை இரவில் தூங்குவதற்கு முன் தொழுதுவிட்டு தூங்கினால் அத்தூக்கத்தில் ஒரு கணவு காண்பார்; அக்கணவே சரியானது என்று சில மனிதர்கள் தவறாக இதனை புரிந்திருக்கின்றார்கள். இது முற்றுமுழுதாக பிழையான கருத்தும் நபிமொழிக்கு மாற்றமான முறையும் ஆகும். மேற்குறிப்பிட்டது போல் இத்தொழுகைகென்று குறிப்பிட்ட நேரம் இல்லை. அத்தோடு இஸ்திகாரா தொழுபவர் கணவு காண்பது நிபந்தனையும் அல்ல! ஆகையால் எப்பொழுது ஒரு மனிதனுக் தேவை வருகின்றதோ அப்பொழுது அவன் தொழுவான். பின்னர் அல்லாஹ்வின் மீது பூரண நம்பிக்கை வைப்பான்.
கேள்வி ::9
அல்லாஹ்வினால் தேர்ந்தெடுத்தவற்றிலே நன்மையுண்டு என நம்ப வேண்டுமா??
பதில் ::9
ஒரு முஸ்லிம், ஒரு விஷயத்துக்காக இஸ்திகாரா தொழுவான்; ஆனால் அந்த விஷயத்தையே முக்கியத்துவப்படுத்தி அதிலே உறுதியாக இருப்பான்; அல்லாஹ் அவனுக்கு அதனை விதியாக்கி இருக்கமாட்டான்! உதாரணமாக, ஒருவன் தனக்கு விரும்பிய பெண்னை திருமணம் முடிப்பதற்காக இஸ்திகாரா தொழலாம். ஆனால் அல்லாஹ்வின் விதியில் அது எழுதப்பட்டிருக்காது. இவ்வாறான நிலைமையில் அல்லாஹ்வின்பால் அவன் நல்லெண்ணம் வைக்க வேண்டும். அவனது விதியை முழுமையாக பொருந்திக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கபட்டவற்றிலே நன்மையும் வெற்றியும் உண்டு என்று அவன் நம்ப வேண்டும். சில வேளைகளில் அவன் விரும்பிய அப்பெண் அவன் மோசமாகுவதற்கு அல்லது பாவியாகுவதற்கு காரணமாக இருக்கலாம்! ஆனால் அதனை அவன் அறியமாட்டான். யாவற்றையும் அறிந்த அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
அல்லாஹ் கூறுகிறான்:
“நீங்கள் ஒன்றை வெறுப்பீர்கள்; அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்; நீங்கள் ஒன்றை விரும்புவீர்கள்; அது உங்களுக்கு தீங்காகவும் இருக்கலாம்; நீங்கள் அறிய மாட்டீர்கள் அல்லாஹ்வே மிக அறிந்தவன்” (அல்-குர்ஆன் 2:216)
அல்லாஹ் கூறுகின்றான்:
“அல்லாஹ் தான் நன்கறிபவன் நீங்கள் அறிய மாட்டீர்கள்” (அல்-குர்ஆன் 2:216)
கேள்வி ::10
#எப்பொழுது துஆவுடன் மாத்திரம் சுருக்கிக்கொள்ள வேணடும்?
பதில் ::10
#சிலருக்கு சில சந்தர்ப்பத்தில் தொழுகையை நிறைவேற்ற முடியாதவர்களாக இருப்பார்கள்! #மாதவிடாய், நிபாஸ் நிலைமைகளில் இருக்ககூடிய #பெண்களைப் போன்றவர்ககளைக் கூறலாம். #இவர்களை பொருத்தவரையில் #தொழ முடியுமான நிலை வரும்வரை தொழுகையைப் பிற்படுத்தலாம். குறித்த அச்சந்தர்ப்பத்தைப் பிற்படுத்த முடியாவிட்டால், #தொழுதுதான் ஆகவேண்டுமானால் துஆவுடன் மாத்திரம் நிறுத்திக் கொள்ளலாம். அதாவது நபிமொழியில் வரக்கூடிய பிரார்தனையை மாத்திரம் கேட்பார். இதற்கு பின்வரக்கூடிய வசனங்கள் ஆதாரமாக அமைகின்றன.
அல்லாஹ் கூறுகின்றான்:
“அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை” (அல்-குர்ஆன் 2:286)
அல்லாஹ் கூறுகின்றான்:
“உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்” (அல்குர்-ஆன் 64:16)
Comments
Post a Comment