கேள்வி பதில்
கேள்வி 🤔1⃣
♾♾♾♾♾♾♾
இளைஞர் கூட்டமே! உங்களில் எவரேனும் திருமணம் செய்து கொள்ளும் தகுதி பெற்றிருந்தால் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில் திருமணம் எதனை பாதுகாப்புதாகவும் உள்ளது❓
பதில்🧐1⃣
〰〰〰〰〰〰〰
ஏனெனில் திருமணம் பார்வையைத் தாழ்த்தக் கூடியதாகவும், வெட்கத் தலத்தைப் பாதுகாப்புதாகவும் உள்ளது
நூல்: புகாரி 1905
கேள்வி🤔2⃣
♾♾♾♾♾♾♾
(திருமணத்திற்க்கு)யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரது #எதனை கட்டுப்படுத்தும்❓
பதில்🧐2⃣
〰〰〰〰〰〰〰
யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரது #இச்சையைக் கட்டுப்படுத்தும்
நூல்: புகாரி 1905
கேள்வி🤔3⃣
♾♾♾♾♾♾♾
அதிகம் குழந்தை பெறுகிற அதிக அன்புநிறைந்த பெண்களைத் திருமணம் செய்து கொள்ளுங்கள காரணம் என்ன❓
பதில்🧐3⃣
〰〰〰〰〰〰〰
திருமணம் செய்யாமலிருப்பதை வன்மையாகத் தடை செய்தார்கள். மேலும், ''அதிகம் குழந்தை பெறுகிற அதிக அன்புநிறைந்த பெண்களைத் திருமணம் செய்து கொள்ளுங்கள். (ஏனெனில்) #நிச்சயமாக_மறுமை_நாளில்_நீங்கள்_அதிக_எண்ணிக்கையிலிருப்பது_குறித்து_மற்ற_நபிமார்களிடம்_பெருமையுடன் பேசுவேன். மற்ற (உம்மத்) விட நான் #உங்களை_அதிகமாகக்_காண்பேன்'' என்றும் கூறுவார்கள் என அனஸ்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத்
இது இப்னு ஹிப்பானில் அபூதாவூத், நஸயீ மற்றும் இப்னு ஹிப்பானில் இதற்கு சான்றாக ஹதீஸ் உள்ளது.
கேள்வி🤔4⃣
பெண் நான்கு காரணங்களுக்காகத் திருமணம் செய்யப்படுகிறாள் அவை எவை ❓
பதில்🧐4⃣
〰〰〰〰〰〰〰
பெண் நான்கு காரணங்களுக்காகத் திருமணம் செய்யப்படுகிறாள்: 1. அவளது சொத்துக்காக
2. அவளது குலச்சிறப்புக்காக
3. அவளது அழகுக்காக
4. அவளது மார்க்கத்திற்காக உனது இருகரங்களும் மண்ணாகட்டும்! மார்க்கமுடையவளை மணம் புரிந்து வெற்றியடைந்து கொள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜா மற்றும் நஸயீ
கேள்வி🤔5⃣
♾♾♾♾♾♾♾♾
ஒரு மனுதனுக்கு சதாரனமாக எத்தனை திருமணம் செய்யலாம்.
பதில்🧐5⃣
〰〰〰〰〰〰〰
கைலான் இப்னு ஸலமா இஸ்லாத்தில் இணைந்தார். அவருக்குப் பன்னிரெண்டு மனைவியர் இருந்தனர். அவர்களும் அவருடன் இஸ்லாத்தில் இணைந்தனர். அவர்களில் (விரும்பிய) #நான்குபேரை மட்டும் தேர்வு செய்து கொள்ளுமாறு நபி(ஸல்) அவர்கள் அவருக்குக் கட்டளையிட்டார்கள் என ஸாலிம் தன் தந்தையிடமிருந்து அறிவிக்கிறார். அஹ்மத், திர்மிதீ,
இது ஹாம்கி மற்றும் இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்திலும் புகாரி, அபூஸுர்ஆ மற்றும் அபூஹாத்தமில் 'மஃலூல்' எனும் தரத்திலும் உள்ளது.
கேள்வி🤔6⃣
♾♾♾♾♾♾♾
மஹரில் சிறந்தது எது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
பதில்🧐6⃣✅
#சுலபமாக இருக்கக் கூடிய மஹரே சிறந்தது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உக்பா இப்னு ஆமீர்(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத்.
இது ஹாம்மில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேள்வி🤔7⃣
♾♾♾♾♾♾♾♾
உங்களில் எவரேனும் விருந்திற்கு அழைக்கப்பட்டால் அவர் பதில் அளிக்கட்டும் நோன்பாளியாக இருந்தால் (கடமையல்லாத நோன்பிருப்பவர்) விரும்பினால் சாப்பிடலாமா?
பதில்🧐7⃣✅
#சாப்பிடலாம்•
உங்களில் எவரேனும் விருந்திற்கு அழைக்கப்பட்டால் அவர் பதில் அளிக்கட்டும்! (செல்லவும்). அவர் நோன்பாளியாக இருந்தால் (அழைத்தவருக்காக) பிரார்த்திக்கட்டும். அவர் நோன்பில்லாதவராக இருந்தால் (சென்று) உணவு உண்ணட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
கேள்வி🤔8⃣
♾♾♾♾♾♾♾♾
நபி(ஸல்) அவர்கள் நிக்காஹ் குத்பாவை இவ்வாறு கற்றுக் கொடுத்தார்கள்•
பதில்🧐8⃣✅
〰〰〰〰〰〰〰
நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு (நிக்காஹ்) குத்பாவை இவ்வாறு கற்றுக் கொடுத்தார்கள்; ''நிச்சயமாக புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே! நாம் அவனைப் புகழ்கிறோம். மேலும் அவனிடமே உதவி தேடுகிறோம். இன்னும் அவனிடமே பாவமன்னிப்புக் கோருகிறோம். இன்னும் நமது உள்ளங்களில் தோன்றும் தீய எண்ணங்களைவிட்டும் அவனிடமே பாதுகாவல் தேடுகிறோம். அல்லாஹ் யாரை நேர்வழிப்படுத்தி விட்டானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அல்லாஹ் யாரை வழி கெடுத்து விட்டானோ அவரை நேர்வழிப்படுத்துபவர் யாரும் இல்லை. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என நான் சாட்சி கூறுகிறேன். இன்னும் முஹம்மத்(ஸல்) அவர்கள் அவனது நல்லடியாரும் தூதரும் ஆவார் என்றும் நான் சாட்சி கூறுகிறேன்'' என்று கூறிவிட்டு, நபி(ஸல்) அவர்கள் அவனது நல்லடியாரும் தூதரும் ஆவார் என்றும் நான் சாட்சி கூறுகிறேன்'' என்று கூறிவிட்டு, நபி(ஸல்) அவர்கள் (3:102, 4:1, 4:70 ஆகிய) மூன்று வசனங்களை ஓதுவார்கள் என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.
இது திர்மிதீ மற்றும் ஹாம்மில் ஹஸன் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேள்வி🤔9⃣
♾♾♾♾♾♾♾
ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய நாடினால் அவர், அவளை பார்ப்பது சரியா?
பதில்🧐9⃣✅
〰〰〰〰〰〰〰〰
ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய நாடிய ஒருவாரிடம், ''அவளை நீ பார்த்து விட்டாயா?'' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டதற்கு, அவர் ''இல்லை'' என்று சொன்னார். (அவாரிடம்) ''செல்! #அவளைப்_பார்த்துக்_கொள்!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
கேள்வி🤔🔟
♾♾♾♾♾♾♾
மஹர் அவசியம் தர வேண்டுமா?
பதில்🧐🔟✅
〰〰〰〰〰〰〰
''ஒரு இரும்பு மோதிரமாவது
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ''குர்ஆனிலிருந்து உன்னிடம் எது (மனனமாக) உள்ளது?'' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ''என்னிடம் இன்னின்ன அத்தியாயங்கள் உள்ளன'' என அவர் எண்ணிக் காண்பித்தார். ''இவற்றை நீ மனனமாக ஓதுவாயா?'' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் ''ஆம்'' என்றார். (அதற்கு) ''செல்! குர்ஆனிலிருந்து உன்னிடம் உள்ளவற்றிற்கு பதிலாக அவளை உனக்கு உரியவளாக்கி விட்டேன்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புகாரி, முஸ்லிம்.
Comments
Post a Comment