கேள்வி பதில்
1️⃣மறுமை நாளிலும் மலைகள் அசையாமல் நிற்குமா❓❓
அ)ஆம்
ஆ) இல்லை
1️⃣Ans##
அ)ஆம்
##மலைகளை நீர் காண்கிறீர். அவை திடமானவை என்று நினைக்கிறீர். அவை மேகம் நகர்வது போல (அந்நாளில்) நகரும்##
இது ஒவ்வொரு பொருளையும் சீராக அமைத்த அல்லாஹ்வின் தயாரிப்பாகும். நீங்கள் செய்பவற்றை அவன் நன்கறிந்தவன்.
##(திருக்குர்ஆன் 27:88)##
2️⃣குதிரைகளுக்கிடையே போட்டி நடத்தியபோது பயிற்சியளிக்கப்படாத குதிரைகள் எந்த இடத்திலிருந்து எது வரை ஓட வேண்டும் என்றும் நபி(ஸல்) அவர்கள் இலக்கு நிர்ணயித்தார்கள் ❓
2️⃣Ans##
##ஸனியதுல் வதா என்ற இடத்திலிருந்து பனூ ஸுரைக் கூட்டத்தினரின் பள்ளிவாசல் வரை
##(புகாரி-420)##
3️⃣"ஹத்" என்பது என்ன❓❓
அ)கசையடி
ஆ)நூறு கசையடி
இ)எண்பது கசையடி
3️⃣Ans##
இ)எண்பது கசையடி
##(திர்மிதீ-3105)##
4️⃣எக்குலத்தாரின் கிணற்றிலிருந்து எடுத்த தண்ணீரில் பிசைந்த மாவை நபியவர்கள் வீசி ஏறிச்சொன்னார்கள் (அ) ஒட்டகத்திற்குக் கொடுக்கச் சொன்னார்கள்❓❓
4️⃣Ans##
##ஸமூது குலத்தார்...
இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தபூக் கோரின்போது (ஸமூத் குலத்தார் வாழ்ந்த) 'ஹிஜ்ர்' என்னும் இடத்தில் தங்கிய சமயம் அதன் கிணற்றிலிருந்து (தண்ணீர்) அருந்த வேண்டாம் என்றும் அதிலிருந்து தண்ணீர் எடுக்க வேண்டாம் என்றும், தம் தோழர்களுக்கு உத்திரவிட்டார்கள். தோழர்கள், 'நாங்கள் அதிலிருந்து (எடுத்த தண்ணீரால் ஏற்கனவே) மாவு பிசைந்து விட்டோமே! (என்ன செய்வது?)' என்று கேட்டனர். அதற்கு அவர்கள் அந்த மாவை (சாப்பிடாமல்) வீசியெறிந்து விடும்படியும் அந்தத் தண்ணீரைக் கொட்டிவிடும்படியும் உத்திரவிட்டார்கள்.
(ஸமூத் குலத்தாரின் கிணற்றிலிருந்து எடுத்த தண்ணீரால் தயாரித்த) உணவை எறிந்து விடும்படி நபி(ஸல்) அவர்கள் உத்திரவிட்டார்கள்' என்று சப்ரா இப்னு மஅபத்(ரஹ்) அவர்களும் அபுஷ்ஷமூஸ்(ரஹ்) அவர்களும் அறிவித்தார்கள். 'அதன் தண்ணீரால் மாவு தயாரித்தவர் அதனை எறிந்து விடட்டும்' என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ தர்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 3378.
அத்தியாயம் : 60. நபிமார்களின் செய்திகள்
5️⃣வான் மழை பிரதேச மக்களின் தாயார் யார்❓❓
Ans##
(அபூ ஹுரைரா(ரலி) கூறினார்:) வான் மழை (பிரதேச) மக்களே! அவர் ##(ஹாஜிரா)தான் உங்களின் தாயார்...
##(புகாரி:3358)##
6️⃣மறுமையில் அல்லாஹ் முந்தியவர்களையும்,பிந்தியவர்களையும் _____________ ஒன்று திரட்டுவான்❓❓
Ans#
##ஒரே சமவெளியில்..
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
ஒரு நாள் (விருந்தின்போது) நபி(ஸல்) அவர்களிடம் இறைச்சி கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்கள், 'அல்லாஹ் மறுமை நாளில் முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ##ஒரே சமவெளியில் ஒன்று திரட்டுவான். அழைப்பவனின் குரலை அவர்கள் கேட்பார்கள்; அனைவரின் பார்வைக்கும் அவர்கள் தென்படுவார்கள்; சூரியன் அவர்களுக்கு அருகில் வரும்.' என்று கூறிவிட்டு 'ஷஃபாஅத்' எனும் பரிந்துரை தொடர்பான ஹதீஸைக் கூறினார்கள்... பிறகு அவர்கள் இப்ராஹீம்(அலை) அவர்களிடம் வருவார்கள். 'நீங்கள் அல்லாஹ்வின் தூதரும் பூமியில் அவனுடைய நண்பருமாவீர்கள். எங்களுக்காக உங்களுடைய இறைவனிடம் பரிந்துரையுங்கள்' என்று கூறுவார்கள். அவர்கள், தாம் சொன்ன பொய்களை நினைவு கூர்ந்து, (இன்று) என்னைப் பற்றியே நான் கவலைப்படுகிறேன். நீங்கள் மூஸா(அலை) அவர்களிடம் செல்லுங்கள்' என்று பதிலளிப்பார்கள்.
##(புகாரி:3361)##
7️⃣ஆயிஷா ரலி அவர்களைப் பற்றி அறியாமையால் அவதூறு பரப்பியவர் யார்❓❓
விடை:
மிஸ்தஹ் இப்னு உஸாஸா ரலி...
##ஸஹீஹ் புகாரி(3388)##
8️⃣ ____________ , _____________ அல்லாஹ்வின் சின்னங்கள். இந்த ஆலயத்தில் ஹஜ்ஜோ, உம்ராவோ செய்பவர், அவ்விரண்டையும் சுற்றுவது குற்றமில்லை. நன்மைகளை மேலதிகமாகச் செய்பவருக்கு அல்லாஹ் நன்றி பாராட்டுபவன்; அறிந்தவன்❓❓
Ans##
##ஸஃபாவும், மர்வாவும்## அல்லாஹ்வின் சின்னங்கள். இந்த ஆலயத்தில் ஹஜ்ஜோ, உம்ராவோ செய்பவர், அவ்விரண்டையும் சுற்றுவது குற்றமில்லை. நன்மைகளை மேலதிகமாகச் செய்பவருக்கு அல்லாஹ் நன்றி பாராட்டுபவன்; அறிந்தவன்.
##(திருக்குர்ஆன் 2:158)##
9️⃣இரத்தத்தில் தோய்க்கப்பட்ட முடிகள் நிறைந்த கழுதைப் புலி யாருடைய கால்களுக்குக் கீழே இருந்தது❓❓
Ans##
##'இப்ராஹீமே! உங்கள் கால்களுக்குக் கீழே என்ன இருக்கிறதென்று பாருங்கள்' என்று கூறப்படும். அவர்கள் கீழே பார்ப்பார்கள். அப்போது, அங்கே இரத்தத்தில் தோய்ந்த முடிகள் நிறைந்த கழுதைப் புலி ஒன்று கிடக்கும். பின்னர் அதன் கால்களைப் பிடித்துத் தூக்கப்பட்டு நரகத்தில் அது போடப்படும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
##ஸஹீஹ் புகாரி(3350)##
🔟மறுமையில் ,முகத்தில் புகையின் கருமையும் புழுதியும் படிந்த நிலையில் யார் தம் தந்யை சந்திப்பார்கள்❓தந்தையின் பெயரும் குறிப்பிடுக❓❓
Ans##
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இப்ராஹீம்(அலை) அவர்கள் (தம் தந்தை) ஆஸர் அவர்களை மறுமை நாளில் சந்திப்பார்கள். ஆஸருடைய முகத்தில் (புகையின்) கருமையும் புழுதியும் படிந்திருக்கும்.
##ஸஹீஹ் புகாரி(3350)##
Comments
Post a Comment