கேள்வி பதில் தொகுப்பு

💎بسم الله الرحمن الرحيم💎

💎اسلام عليكم ورحمة الله وبركاته💎

            #தொகுப்பு

1⃣ ♾ கேள்வி

நீதிபதிகள் மூன்று வகைப்படுவர். இருவர் நரகத்திலும், ஒருவர் சுவர்க்கத்திலும் புகுவர்.

1. நீதியை அறிந்து அதன் படி செயல்படுபவர். இவர் சுவர்க்கத்தில் புகுவார்.

2. நீதியை அறிந்தும் அதன் படி தீர்ப்பளிக்காமல், தீர்ப்பில் அநீதி செய்தவர். இவர் நரகத்தில் புகுவார்.

3. உண்மையை அறியாமல் தன்னுடைய அறியாமையுடனேயே மக்களுக்குத் தீர்ப்பு வழங்கியவர் நரகத்தில் புகுவார்

4) 123 அனைத்தும்பிழை
5) 123 அனைத்தும் சரி

1⃣♾பதில்✔

5 )அனைத்தும் சரி

நீதிபதிகள் மூன்று வகைப்படுவர். இருவர் நரகத்திலும், ஒருவர் சுவர்க்கத்திலும் புகுவர்.
1. நீதியை அறிந்து அதன் படி செயல்படுபவர். இவர் சுவர்க்கத்தில் புகுவார்.
2. நீதியை அறிந்தும் அதன் படி தீர்ப்பளிக்காமல், தீர்ப்பில் அநீதி செய்தவர். இவர் நரகத்தில் புகுவார்.
3. உண்மையை அறியாமல் தன்னுடைய அறியாமையுடனேயே மக்களுக்குத் தீர்ப்பு வழங்கியவர் நரகத்தில் புகுவார்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என புரைதா(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத், நஸயீ, திர்மிதீ இப்னுமாஜா. இது ஹாம்மில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2⃣♾கேள்வி

எவாரிடத்தில் தீர்ப்பளிக்கும் பொறுப்பு தரப்பட்டு விட்டதோ அவர்

1)கத்திக்கூர் முனையால் அறுக்கப்பட்டவர் போன்றாவார்.

2)கத்தியில்லாமல் அறுக்கப்பட்டவர் போன்றாவார்.

2⃣♾பதில்✔

2)

எவாரிடத்தில் தீர்ப்பளிக்கும் பொறுப்பு தரப்பட்டு விட்டதோ அவர் #கத்தியில்லாமல்_அறுக்கப்பட்டவர்_போன்றாவார்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா..
இது இப்னு குஸைமா மற்றும் இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

3⃣♾கேள்வி

நீங்கள் தலைமைப் பதவிக்கு ஆசைப்படவீர்களானால்,

1)மறுமையில் அதுவே உங்களுக்கு வருத்தத்தை உண்டாக்கும்.

2)அது உலக வாழ்வில் இனிமையானது

3)மறுமையில் கசப்பானது
4) 1&2&3

3⃣♾பதில்✔

4) 1&2&3

நீங்கள் தலைமைப் பதவிக்கு ஆசைப்படவீர்களானால், மறுமையில் அதுவே உங்களுக்கு வருத்தத்தை உண்டாக்கும். அது உலக வாழ்வில் இனிமையானது மறுமையில் கசப்பானது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

புகாரி

4⃣♾கேள்வி

தீர்ப்பளிப்பவர் நன்கு ஆராய்ந்து பின்னர் சாரியான முடிவை அடைந்தால் அவருக்கு

1)இரு நன்மைகள் உண்டு.

2)உஹது மலை அளவு நன்மை உண்டு

4⃣♾பதில்✔

1)

தீர்ப்பளிப்பவர் நன்கு ஆராய்ந்து பின்னர் சாரியான முடிவை அடைந்தால் அவருக்கு

#இரு_நன்மைகள்_உண்டு.

என்று நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டதாக அம்ர் இப்னு ஆஸ்ர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

5⃣♾கேள்வி

தீர்ப்பளிப்பவர் நன்கு ஆராய்ந்து தீர்ப்பளித்தும் அதில் தவறு ஏற்பட்டு விட்டால், அவருக்கு

1) ஒரு கிராத் நன்மை உண்டு
2) ஒரு நன்மையுண்டு

5⃣♾பதில்✔

2)

தீர்ப்பளிப்பவர் நன்கு ஆராய்ந்து தீர்ப்பளித்தும் அதில் தவறு ஏற்பட்டு விட்டால், அவருக்கு

#ஒரு_நன்மையுண்டு''

என்று நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டதாக அம்ர் இப்னு ஆஸ்ர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

6⃣♾கேள்வி

கோபமாக இருக்கும் எவரும் அந்நிலையில் இருவருக்கு மத்தியில் தீர்ப்பளிக்க வேண்டாம்

1) ஆம்

2)இல்லை

6⃣♾பதில்✔

ஆம்

கோபமாக இருக்கும் எவரும் அந்நிலையில் இருவருக்கு மத்தியில் தீர்ப்பளிக்க வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என அபூ பக்ரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

7⃣♾கேள்வி

உன்னிடம் எவரேனும் தீர்ப்பு கேட்டு வந்தால் மற்றவாரின் பிரதி வாதியின் பேச்சைக் கேட்காமல் தீர்ப்பளிக்காதே! ஏனெனில், அப்போது தான் எவ்வாறு தீர்ப்பு அளிப்பது என்பதை நீ அறிந்து கொள்வாய்

1)சரி

2)பிழை

7⃣♾பதில்✔

1) சரி

உன்னிடம் எவரேனும் தீர்ப்பு கேட்டு வந்தால் மற்றவாரின் (பிரதி வாதியின்) பேச்சைக் கேட்காமல் தீர்ப்பளிக்காதே! (ஏனெனில்,) அப்போது தான் எவ்வாறு தீர்ப்பு அளிப்பது என்பதை நீ அறிந்து கொள்வாய்!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ''அதற்குப் பின் நான் அவ்வாறே தீர்ப்பளித்து வந்தேன்'' என அலீ(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத்.
இது திர்மிதீயில் ஹஸன் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்னு மதீனீயில் இது 'பலமானது' என்று கூறப்பட்டுள்ளது. இப்னு ஹிப்பானில் 'ஸஹீஹ்' எனும் தரத்ததிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

8⃣♾கேள்வி

மார்க்க மற்றும் நீதிமன்றத் தீர்ப்புக்காக இலஞ்சம் வாங்குபவரையும், இலஞ்சம் கொடுப்பவரையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள்

1)ஆம்

2)இல்லை

8⃣♾பதில்✔

1) ஆம்

மார்க்க மற்றும் நீதிமன்றத் தீர்ப்புக்காக இலஞ்சம் வாங்குபவரையும், இலஞ்சம் கொடுப்பவரையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா, அஹ்மத்.
திர்மிதீயில் ஹஸன் எனும் தரத்திலும் இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்திலும் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.

9⃣♾கேள்வி

நீதிவிசாரணையின் போது வாதியும், பிரதிவாதியும் நீதிபதிக்கு முன்பு சாரிசமமாக அமர வேண்டும்

1)ஆம்

2)இல்லை

9⃣♾பதில்✔

1)ஆம்

நீதிவிசாரணையின் போது வாதியும், பிரதிவாதியும் நீதிபதிக்கு முன்பு (#சாரிசமமாக) அமர வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள் என அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத். இது ஹாம்மில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

🔟♾கேள்வி

முஸ்லிம்களுடைய விவகாரங்களில் சிலவற்றுக்குப் பொறுப்பாளராக அல்லாஹ் எவரை நியமித்து விட்டானோ, அவர் முஸ்லிம்களில் தேவையுடையவர்களையும், ஏழை எளியவர்களையும் அவர்களது தேவையை நிறை வேற்றிக் கொள்ளவிடாமல் தடுத்துவிட்டால், அல்லாஹ் அவரது தேவையை நிறைவேற்றிக் கொள்ளவிடாமல் தடுத்துவிடுவான்

1)சரி

2)பிழை

🔟♾பதில்✔

1)சரி

முஸ்லிம்களுடைய விவகாரங்களில் சிலவற்றுக்குப் பொறுப்பாளராக அல்லாஹ் எவரை நியமித்து விட்டானோ, அவர் முஸ்லிம்களில் தேவையுடையவர்களையும், ஏழை எளியவர்களையும் அவர்களது தேவையை நிறை வேற்றிக் கொள்ளவிடாமல் தடுத்துவிட்டால், அல்லாஹ் அவரது தேவையை நிறைவேற்றிக் கொள்ளவிடாமல் தடுத்துவிடுவான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ மர்யம் அல் அஸ்தீ(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத், திர்மிதீ

Comments

  1. Merkur Futur-Style Barber Pole Safety Razor, Chrome,
    MERKUR Futur-Style Barber Pole Safety Razor, Chrome, Shaving Set, Matte Finish, Matte Finish bk8 - Merkur Futur-Style 메리트 카지노 주소 Barber Pole Safety Razor, Chrome, Shaving Set, dafabet

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கேள்வி பதில்

கேள்வி பதில்

கேள்வி பதில்