கேள்வி பதில்

கேள்வி :1
நபி(ஸல்) அவர்களிடம் எனக்கு ஏதேனும் அரசுப் பதவி வழங்கக் கூடாதா? என்று கேட்டவர் யார்?

A) அபூ முசா அல் அஷ்அரீ ரலி
B ) அபூசயீத் அல் குத்ரீ ரலி
C ) அபூதர் ரலி
D ) முஆத்பின் ஜமல் ரலி

பதில் 1

C அபூதர் ரலி

முஸ்லிம் :- 3729

கேள்வி :2

சுரைக்காயை விரும்பக் கூடியவராக இருந்தவர் யார்?

A அபுஹுரைர (ரலி)
B அனஸ் இப்னு மாலிக் ( ரலி)
C ஜுன்தப் பின் அப்தில்லாஹ் ( ரலி)பதில் :2

B அனஸ் இப்னு மாலிக் (ரலி )

புஹாரி :- 2092கேள்வி :3

என்னை அநீதிக்குச் சாட்சியாக்காதீர் என்று நபி (ஸல்) அவர்களிடம் எந்த ஸஹாபி கூறினார்?

A நாஃபிஉ பின்அபீம அமர் ரலி
B நுஅமான் பின் பஷீர் ரலி

பதில்:3

புஹாரி :- 3328

#நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தந்தையிடம், "என்னை அநீதிக்குச் சாட்சியாக்காதீர்" என்று கூறினார்கள்.

கேள்வி :4

நபி(ஸல்) அவர்களின் முகத்தில் பசியை உணர்ந்தவர் யார்?

A அபுல் காசிம் 
B அபூ ஷீஜப்

பதில் :4

அபூஷுஜப் என்ற அன்சாரி

புஹாரி :- 2081

கேள்வி : 5

இரத்தம் குத்தி உறிஞ்சி எடுப்பதைத் தொழிலாகக் கொண்ட ஓர் அடிமையை விலைக்கு வாங்கியவர் யார்?
பதில் : 5

#அபூ_ஜுஹைஃபா(ரலி)

புஹாரி :-2086

அவ்ன் இப்னு அபீ ஜுஹைஃபா(ரஹ்) அவர்கள் கூறினார்:
இரத்தம் குத்தி, உறிஞ்சி எடுப்பதைத் தொழிலாகக் கொண்ட ஓர் அடிமையை என் தந்தை (அபூ ஜுஹைஃபா(ரலி)) விலைக்கு வாங்கினார்கள். (பிறகு, அவரின் தொழில் கருவிகளை உடைத்துவிட்டார்கள்.) இது தொடர்பாக அவர்களிடம் நான் (விளக்கம்) கேட்க, அவர்கள் 'நபி(ஸல்) அவர்கள் நாய் விற்ற கிரயத்தையும் இரத்தத்தின் கிரயத்தை (இரத்தம் குத்தி, உறிஞ்சி எடுப்பதற்குப் பெறுகிற கூலியை)யும் தடை செய்தார்கள்; பச்சை குத்துவதையும், பச்சை குத்திக் கொள்வதையும் தடை செய்தார்கள்; வட்டி உண்பதையும் வட்டி கொடுப்பதையும் தடை செய்தார்கள்! மேலும், உருவம் வரைபவனைச் சபித்தார்கள்!' என்று பதிலளித்தார்கள்.

கேள்வி :6
நபி(ஸல்) அவர்கள் குமுஸிலிருந்து ஓர் ஒட்டகத்தை யாருக்குக் கொடுத்தார்கள்?

அ )உதுமான் (ரலி)
ஆ  )உமர்  ( ரலி)
இ )அலி  (ரலி)

பதில் :6

அலீ(ரலி) அறிவித்தார்.
“கனீமத் மூலம் கிடைத்த வயதான ஓர் ஒட்டகம் என்னிடம் இருந்தது; நபி(ஸல்) அவர்கள் குமுஸிலிருந்து இன்னொரு ஒட்டகத்தையும் எனக்குக் கொடுத்திருந்தார்கள்! நபி(ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமவுடன் (வீடு கூடி) இல்லறம் தொடங்க நான் நாடினேன்; (எனவே) என்னுடன் சேர்ந்து இத்கிர் (என்னும்) புல்லைக் கொண்டு வருவதற்காக பனூகைனுக்கா குலத்தைச் சேர்ந்த பொற்கொல்லர் ஒருவரை ஏற்பாடு செய்திருந்தேன். அந்தப் புல்லை பொற்கொல்லர்களுக்கு விற்றுவிட்டு அதன் (வருவாய்) மூலம் என் திருமண விருந்ததை நடத்த நாடினேன்!“

கேள்வி : 7
ஸைத் இப்னு அர்கம் (ரலி ) கலந்துக்கொண்ட முதல் போர் எது?

அ அகழ் போர்
ஆ உஹது போர்
இ உஸைர் போர்
ஈ பத்ருபோர்

பதில் : 7

இ  உஷைர் போர்

புஹாரி:- 3949

அபூ இஸ்ஹாக்(ரஹ்) அறிவித்தார்
நான் ஸைத் இப்னு அர்கம்(ரலி) அவர்களுக்கும் அருகிலிருந்தபோது, 'நபி(ஸல்) அவர்கள் புரிந்த போர்கள் எத்தனை?' என்று அவர்களிடம் வினவப்பட்டது. 'பத்தொன்பது' என்று அவர்கள் பதிலளித்தார்கள். 'நபி(ஸல்) அவர்களுடன் நீங்களும் பங்கெடுத்த போர்கள் எத்தனை?' என்று வினவப்பட்டபோது, 'பதினேழு' என்றார்கள். 'இவற்றில் முதல் போர் எது?' என்று நான் அவர்களிடம் கேட்டேன். அவர்கள், 'உஸைரா' அல்லது 'உஷைர்' என்று பதிலளித்தார்கள்.
கதாதா(ரஹ்) அவர்களிடம் நான் கேட்டபோது அவர்கள், 'உஷைரா தான் (சரியான உச்சரிப்பு)' என்றார்கள்.

கேள்வி :- 8

الْقَھَّارُ  
         Al-Qahhaar

அல்ஹ்ஹார்

இதன் பொருள் என்ன ?

பதில் :- 8
   الْقَھَّارُ

*Al-Qahhaar:*

*அடக்கி ஆளுகின்றவன்*

يَوْمَ تُبَدَّلُ الْاَرْضُ غَيْرَ الْاَرْضِ وَالسَّمٰوٰتُ‌ وَبَرَزُوْا لِلّٰهِ الْوَاحِدِ الْقَهَّارِ‏

(நபியே! ஒரு நாளை அவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள்:) அந்நாளில் இந்தப் பூமியை மாற்றி வேறுவித பூமியாக அமைக்கப் பட்டுவிடும்; வானங்களும் அவ்வாறே. (ஒவ்வொருவரும் தத்தம் இடத்திலிருந்து) வெளிப்பட்டு  அனைவரையும் #அடக்கி #ஆளுகின்ற ஒரே இறைவனாகிய அந்த அல்லாஹ்வின் சந்நிதியில் கூடி விடுவார்கள்

(அல்குர்ஆன் : 14:48)
கேள்வி : 9
அல்லாஹ் உற்ற தோழனாக ஆக்கி கொண்ட இருவர் யார்?

பதில் : 9

இப்ராஹீம் (அலை)

முஹம்மது நபி  (ஸல்)

925. ஜுன்தப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இறப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன் "உங்களில் ஒருவர் என் (தேவைகளுக்காக நான் அணுகும்) உற்ற தோழராக இருப்பதிலிருந்து (விலகி) நான் அல்லாஹ்வையே சார்ந்திருக்கிறேன். ஏனெனில், உயர்வுக்குரிய அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களை (தன்) உற்ற தோழராக ஆக்கிக்கொண்டதைப் போன்று என்னையும் (தன்) உற்ற தோழனாக ஆக்கிக்கொண்டான். நான் என் சமுதாயத்தாரில் ஒருவரை என் உற்ற தோழராக ஆக்கிக்கொள்வதாயிருந்தால் அபூபக்ர்  அவர்களையே நான் என் உற்ற தோழராக ஆக்கிக்கொண்டிருப்பேன். அறிந்துகொள்ளுங்கள்: உங்களுக்கு முன்னிருந்த (சமுதாயத்த)வர்கள் தங்களுடைய நபிமார்கள் மற்றும் சான்றோர்களின் அடக்கத் தலங்களை வழிபாட்டுத்தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள். எச்சரிக்கை! நீங்கள் அடக்கத் தலங்களை வழிபாட்டுத்தலங்களாக ஆக்கிவிடாதீர்கள். அவ்வாறு செய்ய வேண்டாம் என்று உங்களுக்கு நான் தடை விதிக்கிறேன்" என்று கூறுவதை நான் கேட்டேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

கேள்வி : 10

என் இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக!

இந்த துஆ கேட்ட நபி யார் ?

அ ) முஹம்மது நபி
ஆ ) ஜக்கரியா நபி
இ )  மூஸா நபி
ஈ )  இப்ராஹிம் நபி

பதில் : 10

ஈ ) இப்ராஹிம் நபி

رَبِّ اجْعَلْنِىْ مُقِيْمَ الصَّلٰوةِ وَمِنْ ذُرِّيَّتِىْ‌‌   رَبَّنَا وَتَقَبَّلْ دُعَآءِ‏
(“என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!”

(அல்குர்ஆன் : 14:35- 40)

Comments

Post a Comment

Popular posts from this blog

கேள்வி பதில்

கேள்வி பதில்